மண்டையைக் குடைஞ்சுக்கிட்டிருந்ததே….ஒரு வழியாய் எல்லா சஸ்பென்சும் தீர்ந்ததா? பல காலம் பார்க்காத உறவினர்களை சந்திக்க சந்தர்பம் அமையும். உங்களுடைய இனிய பேச்சுக்கு ரசிகர் மன்றமே உள்ளது. பொன்னும் பொரு ளும் நிறைய சேரும். அவ்வப்போது பேச்சையும் மனசையும் வைரஸ் ஸ்கேன் செய்துக்குங்க. உறவினர்களுக்காக அலைந்து திரிந்து உதவ வேண்டியிருக்கும். அதனால் என்ன? செய்வோமே, செலவினங்கள் வந்து கொண்டே இருக்கும். மாணவர்களுக்கு மதிப்பெண்களும் அதிகரிக்கும்.

முடிந்தால் பிள்ளையார்ப்பட்டி போகலாமே

வெயிட்.. வெயிட்.. பார்த்து …பார்த்து…அலுவலக விஷயங்களில் அவசரம் காட்ட வேண்டாம். எல்லோரிடமும் கட்டாயமாக அனுசரித்துப் போயே ஆக வேண்டும். புதிய ஒப்பந்தங்கள் கண்ணாமூச்சி காட்டினாலும் கட்டாயம் கனிந்து மடியில் விழும் என்று நம்பிக் காத்திருக்கலாம். கணவரின்/ மனைவியின் உடல் நலனை கவனிங்க. மாணவர்களுக்கு நன்கு படிக்கும் ஆர்வம் ஏற்படும். சோம்பல் காரணமாகவோ உடல் நிலை காரணமாகவே சில வேலைகளை  வேறு வழியின்றித் தள்ளிப் போடுவீர்கள். இத பாருங்க….சிறு சிறு டென்ஷன்கள் இருக்கிறதே என்று கவலை வேண்டாம். முன்பிருந்தமாதிரி பெரிய பெரிய டென்ஷன்கள் இல்லையே என்று சந்தோஷப்படுங்கள். கடன்கள் வாங்க இது உகந்த நேரம் அல்ல. ஒத்திப் போடுங்கள். செலவுகளை மட்டுப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் கடுமையான முயற்சி செய்ய வேண்டியிருக்கும். செய்யுங்களேன்.

முடிந்தால் சக்கரபாணி / சாரங்கபாணி கோயிலுக்குப் போகலாமே

இப்பவே சொல்லிப்புட்டேன்…சாகசமெல்லாம் செய்ய வேண்டாம். சாதுவாய் இருங்க போதும். குழந்தைங்க எப்பவும் போல உங்கமேல மரியாதை காட்டு வாங்க. அலுவலகத்திலும் மதிப்பு கூடும். எல்லாம் நீங்க நடந்து கொள்ளும் விதத்தினால்தான். சபாஷ். படிப்பு விஷயத்திலர் கொஞ்சம் சுணக்கம் ஏற்படலாம். விடாதீங்க. முயன்று முயற்சி செய்தால் முழு வீச்சில் முன்னேறுவீங்க. தேங்கி யிருந்த வழக்குகள் நல்ல விதமாகவும் உங்களுக்கு சாதகமான முறையிலும் தீர்ப்புக் கிடைக்கும். இப்பவே சொல்லிப்புட்டேன்…சாகசமெல்லாம் செய்ய வேண்டாம். சாதுவாய் இருங்க போதும். குழந்தைங்க எப்பவும் போல உங்கமேல மரியாதை காட்டுவாங்க. அலுவலகத்திலும் மதிப்பு கூடும். எல்லாம் நீங்க நடந்து கொள்ளும் விதத்தினால்தான். சபாஷ். படிப்பு விஷயத்திலர் கொஞ்சம் சுணக்கம் ஏற்படலாம். விடாதீங்க. முயன்று முயற்சி செய்தால் முழு வீச்சில் முன்னேறுவீங்க.

முடிந்தால் வைத்தீஸ்வரன் கோயில் போகலாமே

 

வெளிநாட்டிலிருந்து வருமானம் .. இன்கம்… பிராஃபிட்…. லாபம்…வர வாய்ப்பு அதிகம் உண்டு. மகள் மகன் வழியில் நன்மைகளும் ஹாப்பினஸ்ஸும் உண்டு நெருங்கிய உறவினருடன் போக்கு வரத்து அதிகரிக்கும். பொழுது போக்கு அம்சங்களில் கவனம் செல்லும். வங்கி சேமிப்பு குறையும். உறவினர் நண்பர்களின் வருகையால் வீட்டில் கலகலப்பு இருந்தாலும் மனதுக்குள் சிறு கவலைகளை மறைத்து வைத்து சிரமப்படுவீர்கள். ஹலோ….யார் தூண்டினாலும் பொறுமையா இருங்க. பேப்பர் போடறேன்னு பாஸ் அறையின் வாசலில் போய் நிற்க வேண்டாம். அவசரமின்றி எதையும் அணுகுங்க. பலன் அபரிமிதமா  இருக்கும், உறுத.

முடிந்தால் மீனாட்சி குடியிருக்கும் மதுரைக்குப் போகலாமே

சந்திராஷ்டமம்  : 21.04.2017 முதல் 23. 04.2017 வரை

சிலர் உத்யோகமே மாறக்கூடும். ரெஜிஸ்ட்ரேஷனுக்குத் தயாரா இருங்கம்மா…வீடு வாங்க சான்ஸ் இருக்கு.  விற்கலாம். லாபம் வரும். பல காலம் நிறை வேற்றாத திட்டங்கள் நிறைவேறும். கோயில்களுக்குப் போவீங்க. நிறையப் புண்ணிய காரியங்கள் செய்வீங்க. குடும்ப விவகாரங்களிலோ அல்லது பொருட்கள் பழுதாவதாலோ  உங்களுக்குப் பிரச்சினைகளும் கோபமும் உண்டாகலாம். ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். கொஞ்சம் பின்னால் திரும்பிப் பாருங்க. நீங்க வெளியே வந்தால் உள்ளே முண்டியடிச்சு நுழைய நூறு பேர் காத்திருக்காங்க. பொறுமையாய் இருங்க. அட எத்தனை நாட்கள். இன்னும் கொஞ்சமே கொஞ்ச நாட்கள்தாங்க.

முடிந்தால் நடராஜர் குடியிருக்கும் சிதம்பரம் போகலாமே

சந்திராஷ்டமம்  : 23.04.2017 முதல் 25.04.2017 வரை

உழைப்பினால் நன்மைகள் உங்க அட்ரஸ் விசாரிச்சுக்கிட்டு வரப்போகுது. நிலம் வீடு போன்றவற்றின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். செலவினங்கள் குறையும். லாபங்கள் அதிகரிக்கும். உங்கள் திறமை கவனிக்கப்படும்.புதிய வாகனம் /புதிய வீடு  வாங்குவதற்கு ஏற்பாடு செய்வீர்கள்/ எல்லா இடங்களிலும் முக்கியத்துவம் எதிர்பார்க்காதீங்க,  ஆமாம், சொல்லிட்டேன். பொறுமையை அதிகம் கடைப்பிடிக்க வேண்டும். பெற்றோரிடமிருந்து நன்மைகளை எதிர்பார்க்கலாம். உடல் நிலையில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் மெல்ல மெல்ல டாட்டா காண்பிக்க ஆரம்பிக்கும். 18ம் தேதிக்குப்பிறகு நல்லவை நடக்கும். குடும்பத்தில் புதிய நபர் வரப்போவதற்கான ஏற்பாடுகள் நடக்கும் கோயில்களுக்குப் போவீர்கள்

முடிந்தால் திருச்செந்தூர் போகலாமே

சந்திராஷ்டமம்  : 25.04.2017 முதல் 27.04.2017 வரை

 

உடல் நிலையில் இருந்து வந்த பிரச்சினைகள் எல்லாம் ஆல்ரைட்டாகும்மா. வெளிநாட்டிலிருந்து பரிசுகள் அல்லது அன்பளிப்பு அல்லது பண வரவு வரும்.. நண்பர்கள் மத்தியில் சும்மா காலர் தூக்கிவிட்டுக்கும்படியா கெத்து அதிகரிக்கும். தொழிலிலும் அலுவலகத்திலும் லாபம் நிச்சயம் கிடைக்கும். அதுக்கு எந்தக் குந்தகமும் குறையும் இல்லைம்மா, ஷ்யூர்….  பெரிய அளவில் போட்டிருந்த திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வது நல்லது. ஆடை ஆபரணங்களுக்காக கரென்சி கரையும்.நண்பர்கள் மூலம் நன்மைகளை எதிர்பார்க்கலாம்.நண்பர்களின் தனிப்பட்ட விவகாரத்தில் ஏன் உங்க அழகிய மூக்கை நுழைக்கறீங்க? சகோதரர்களால் நன்மையடையப் போறீங்க.

முடிந்தால் சமயபுரம் போகலாமே

நல்ல வகையில் பணம் செலவழியும். பொழுது போக்கு விஷயங்களில் ஈடுபட முடியாது. நண்பர்கள் சந்திப்பு உண்டு.  அவர்களால்  நன்மையும்  உண்டு. மனதில் குடும்பம் சம்பந்தமான சிறு சிறு குறைகள் இருப்பதைத்  தவிர்க்க முடியாது. ஆனால் அதெல்லாம் ஜஸ்ட் தற்காலிகம்தாங்க. கணவன் மனைவிக்குள் மிகவும் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். என்ஜாய். பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபடுவதால் மனம் லேசாகும். எதிர்பாராத பண வரவு சிறிதளவு உண்டு.  ஓவரா எதிர்பார்க்க வேண்டாம், எழுத்துத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு …உங்க படைப்புகள் அங்கீகரிக்கப்படும்.

முடிந்தால் முருகன் குடியிருக்கும் பழனிக்குப் போகலாமே

ஹப்பாடா.. பெருமூச்சு விடுங்க…. அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாகத்தீரும். உங்களைப் பரம எதிரியாக நினைத்தவர் நல்ல முறையில் வேறு வேலைக்குப் போய்விடுவதால் நிம்மதிப் பெருமூச்சு என்றால் என்ன என்று பல காலம் கழித்து நினைவுக்கு வரும். விஷப் பூச்சிகளிடம் விளையாடிக் கொஞ்சும்படியான இடங்களுக்கு செல்லாமல் விலகியே இருங்க. இத்தனை காலம் இருந்து வந்த வசதியான வீட்டையும் அலுவலகத்தையும் விட்டு, சற்று வசதிக்குறை வான இடத்தில் இருக்க நேரலாம். எல்லாம் மிகத் தற்காலிகம்தான்-அப்டின்னு மனசுக்குள்ள ஒரு போர்டு போட்டுக்குங்க.

முடிந்தால் திருநள்ளாறு போகலாமே

வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நம்பிக்கையூட்டும் நிகழ்ச்சிகள் நடக்கும். சிறிய அளவில் உடல் நலக் கோளாறுகள் ஏற்படக்கூடும். ஸோ வாட்? நேத்திக்குப் பறிச்ச உருளைக் கிழங்கு மாதிரி கிண்ணுனு எழுந்துடுவீங்க.  உங்க கடமைகள் உங்களுக்காக வெயிட் பண்ணிக் காத்துக்கிட்டிருக்கும்போது அதிகமாகக் காலம் கடத்த வேண்டாம். அந்த தூங்காதே தம்பி தூங்காதே என்ற பழைய பாடலை ஒரு பத்து வாட்டி கேளுங்க. உத்யோகம் சம்பளம் இரண்டு கிராஃப்களும் மேல் நோக்கி உயர  வாய்ப்பு உள்ளது. சொத்து வாங்க செய்த முயற்சிகள் விருப்பப்படி நிறைவேறும்.

முடிந்தால் ஸ்ரீரங்கம் போகலாமே

அலுவலகம் சம்பந்தமான சில சாதனைகளை செய்து முடிப்பீர்கள். தந்தையால் உங்களுக்கு நன்மைகளும் மகிழ்ச்சியும் ஏற்படும்.விருதுகளும் பரிசுகளும் கிடைக்கும். சத்துள்ள உணவு சாப்பிடுங்கள்பொது விஷயங்களில் ஈடுபட வேண்டி வரும். வீட்டில் மகிழ்ச்சியும் கலகலப்பும் கூடும்.  உங்க பெண்களுக்கு சிநேகிதியுடன் மகிழ்ச்சியாகப் பொழுது கழியும்.சிறப்பாக எதையும் எதிர் பார்க்க வேண்டாம். நிறையச் செலவுகள் இருக்கும். நோட்டு பறக்கும், அலுவலகவாசிகளுக்கு நன்மை அதிகரிக்கும். நீங்கள் மனதில் திட்டம் போட்டிருந்த நிகழ்ச்சி லிஸ்ட் வரிசை  மாறி நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்த காரியங்களை முடிக்க முடியாமலும் போகலாம்

முடிந்தால் பெருமாளைக் கும்பிடத் திருப்பதி போகலாமே

நீங்கள் செய்யும் முயற்சிகள் யாவும் வெற்றியடையும். சிரமங்களிலிருந்து நல்ல முறையில் ரிலீஃப்தான் போங்க. சிலர் புதிய வேலைக்கு முயற்சி செய்வதில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும்.நல்ல நண்பர்களால் நன்மைகள் ஏற்படும். உங்கள் உடல் நலம் குறித்து சற்று அதிகப்படி அக்கறை காட்டியாக வேண்டும். சும்மா எனக்கென்னன்னு அதை அலட்சியம் செய்துட்டுப் போயிக்கிட்டே இருக்க முடியாது.. கூடாது.. புரிஞ்சுதா? மை டியர் ஸ்டூடன்ட்ஸ்… உங்களின்  கவனம் சிதறாமல் சற்று சிரத்தையுடன் படித்தால் நல்ல மதிப்பெண்கள் வாங்கலாமேம்மா. ப்ளீஸ்… இப்பன்னு பார்த்து எவ்ளோ டைவர்ஷன்ஸ். அடாடா.  . எதிர்பாராத செயல்களில் ஈடுபட வேண்டியும் இருக்கலாம். ஆரோக்யம் நல்ல முறையில் இருக்கும். சொத்து வாங்க செய்த முயற்சிகள் விருப்பப்படி நிறைவேறும்.

முடிந்தால் குருவாயூர் போகலாமே