மேஷம்

வீடு வாங்குவது பற்றி இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து,… ஹப்பாடா.. நிம்மதி. மம்மிக்கு ஆபரேஷன் இல்லையாம். வெறும் மருந்து மாத்திரையிலேயே சரியாகுமாம். ஹாப்பி? நண்பர்கள் எல்லாம் உதவியோ உதவி செய்வார்கள். அவர்களால் கப்பல் கப்பலாக நன்மை உண்டு.  இந்த ஆரோக்யம் இருக்கு பாருங்க ஆரோக்யம், அதை மட்டும் அதி முக்கியமான விஷயம் என்பதைத் தூக்கத்திலும் மறக்க வேண்டாம். சிஸ்டர்ஸ் மற்றும் பிரதர்ஸ் கலைத்துறையில் கலக்குவாங்க. பேச்சில்  ரெண்டு ஃபில்டர் போட்டுக்குங்க. முக்கியமாக அலுவலகத்தில்

ரிஷபம்

ஆரோக்யத்தில் செம முன்னேற்றம் இருக்கும். போராடிப்போராடி ரொம்ப நாளாய் முடியாத விஷயம்ஸ் எல்லாம் இப்ப முடியும். பேச்சில் கற்கண்டு தேன் எல்லாம் சேர்வதால் உங்களை எல்லாருக்கும் அம்புட்டுப்பிடிக்கும். உடன் பிறப்புக்களுடன் சண்டை சச்சரவு.. போர்… யுத்தம்.. எதுவும் வெச்சுக்காதீங்க. ஆமாம், சொல்லிப்புட்டேன். மகன்ஸ் மகள்ஸ் எல்லாரும் உங்க சொல்பேச்சைக் கேட்டு வயிற்றில் இனிப்பான பால் வார்ப்பார்கள். புதுசாய் ஏதாவது கற்க ஆரம்பிப்பீங்க. மாணவர்களுக்கு அருமையான நேரம். உழைப்பு அதிகமாகும். பலனும்தான்.

மிதுனம்

ஆரோக்யம் பற்றி இனி சற்று அதிக விழிப்புணர்வு வேணுங்க. ப்ளீஸ். எதையும் யாரிடமும் பேசவே வேண்டாம். குறிப்பாய்ப் போட்டுக்கொடுத்தல் திட்டல் கோழி மூட்டுதல் வேண்டவே வேண்டாம். கடன் சாங்ஷன் ஆகும். நண்பர்கள் என்று நீங்கள் நினைப்பவர்கள் நண்பர்களும் அல்ல. பகைவர்கள் என்று நீங்கள் நினைப்பவர்கள் பகைவர்களும் அல்ல. புது வீடு வாங்கு வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். மம்மிக்கு நன்மைகள் அதிகம் நடக்கும். அவங்களுக்கு லாபம் அதிகரிக்கும். அவங்களால உங்களுக்கு நன்மை உண்டு.     

கடகம்

ஒரு நாளைக்கு ஒரு மாதிரி மூட் இருந்தா யாரும் உங்களைச் சீந்த மாட்டாங்க. பயப்படு வாங்க. போதாக்குறைக்கு பெரிய பொறுப்பெல்லாம் அலுவலகத்தில் கொடுப்பாங்க. ஜமாய்ப்பீங்க. நல்ல வேளையாய்ப் பேச்சில் புத்திசாலித்தனம் இருப்பதால் அதை வெச்சு ஜெயிப்பீங்க. குடும்பங்களையும் நண்பர்களையும் இணைக்க உதவுவீங்க. ஆனால் அதற்கு யாரும் உங்களை மேடை கீடை போட்டுப் பாராட்ட மாட்டாங்க. எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டாம். புது பிசினஸ் ஆரம்பிக்க விரும்பினால் உங்க ஜாதகப்படி தசை புக்தி எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்கிட்டு குதிங்க.

சிம்மம்

செலவுன்னா செலவு.. அத்தனை செலவுகள் இருந்தாலும்கூட அதனால் மகிழ்ச்சியும் நன்மையும்தான் ஏற்படும். வீண் செலவு இருக்காது. ஏமாற மாட்டீங்க. குடும்பத்தில் ஹாப்பி நிகழ்ச்சி ஏற்படும். பேச்சினால் லாபமும் மகிழ்ச்சியும் நன்மையும் ஏற்படும். வங்கியில் தொகை மேலும் மேலும் அதிகமாகும். கார்டை தைரியமாய்த் தேய்க்கறீங்க. கொஞ்சம் குறைச்சுக்குங்க. மம்மியுடன் கொஞ்சம் ஊடல் இருக்கும். அவங்க திட்றதைப் பொருட்ப டுத்தாதீங்க. அதெல்லாம் ஆசீர்வாதம். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் மெல்லத் தேய்ந்து குறைந்து மறையும்.

சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 13  வரை

கன்னி

அப்பாவுக்கும் உங்களுக்கும் ஏற்பட்டுக்கொண்டிருந்த சண்டைகள் ஒரு வழியாய்த் தீர்ந்து அசடு வழிந்தவாறு ‘அப்பா ஐ லவ் யூ’ என்பீர்கள். சகோதர  சகோதரிகளுக்குச் சின்னச்சின்ன பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவற்றை ஓடிச்சென்று தீர்த்து வைத்து நல்ல பெயர் எடுப்பீர்கள். குழந்தைகள் சற்று டென்ஷன்கள் கொடுத்தால் அவற்றைப் பெரிதாக்காமல் கடக்கக் கற்றுக் கொள்வது உங்களுக்கு நல்லது. ஏனெனில் சில காலத்தில் அவர்களை பார்த்து “இது என் குழந்தை” என்று நீங்கள் பெருமைப்படப் போறீங்க. அதற்கு நிறைய சான்ஸ் இருக்கு. அடேயப்பா. எத்தனை எத்தனை லாபங்கள். எவ்வளவு வருமானம்ஸ். வாழ்த்துகள்.

சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15  வரை

துலாம்

புது வேலை மாறப்போறீங்க. தயாரா இருங்க. முதலில் தப்பான தீர்மானமோ என்ற பயம் ஏற்பட்டாலும் போகப் போக வேலை பழகி அட இதுக்கா இவ்ளோ பயந்தேன் என்று கண்ணாடி பார்த்துச் சொல்லி உங்களைப் பார்த்தே சிரித்துக் கொள்வீர்கள். மம்மிக்கு ஏதாவது சின்ன பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. கவனமாய்ப் பார்த்துக்குங்க. அவங்களோட சண்டை போட்டுவிட்டு அப்புறம் வருத்தம் வேணாம். பல விதமான பிரச்சினைகளிலிருந்து வெளியே வரப்போறீங்க. பல மாச பயங்களுக்கு முற்றுப்புள்ளி. நல்ல சிநேகிதிகள்.. சிநேகிதர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். சின்னச் சின்ன செலவுகள் எறும்புக்கடி மாதிரி இருக்கும். பெரிசாய்க் கவலைப்பட எதுவும் இல்லை

சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 17  வரை

விருச்சிகம்

பொறுமையா இருந்தே தீரணுமேங்க. வேற வழியே இல்லை. அப்பாடா. மம்மிக்க இருந்து வந்த பிரச்சினைகளுக்கு ஃபுல் ஸ்டாப். வாகனங்களால் இருந்து வந்த பிராப்ளம்ஸ்க்கு டாடா. பள்ளி கல்லூரிகளில் வாங்கிய கெட்ட பெயர்கள் மாறி உங்க அருமையையும் உயர்வையும் புரிஞ்சுப்பாங்க. பெண்களுக்கு கர்பப்பை சம்பந்தப்பட்ட சின்னப் பிரச்சினைகள் ஏற்படலாம். ஆண்களுக்கு அடி வயிற்றில் டென்ஷன் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சுத்தமும் சுகாதரமும் மிக அவசியம் எனப்தை நினைவுல வெச்சுக்குங்க.

தனுசு

கணவன் மனைவிக்கிடையே நல்ல புரிதல் இருக்கும். அன்னியமா இருந்தவங்க அன்னி யோன்னியமா ஆவீங்க. புது வேலை மாற முயற்சி செய்ய நினைச்சவங்க இனிமேல் தைரியமாய் முயற்சியை வேகப்படுத்துங்க. வெற்றி உண்டு. வேலை மாறாதவங்க, இருக்கும் வேலையில் உயர்வீங்க. பேச்சில் முன்பைவிட அதீத கவனம் வேணுங்க. ஆரோக்யத்தைக் கெடுக்கும் தீய பழக்கங்களுக்கு “டாட்டா..பை பை ..ஸீயூ” என்று சொல்லிடுங்க. மம்மிக்கு வேலை  பார்க்கும் இடத்தில் மட்டுமின்றி அவங்க  பொறந்த வீட்டிலிருந்தும் நன்மைகள் உண்டு  

மகரம்

புகழும் பெருமையும் நீங்க நினைச்சதைவிட அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள்ள சின்ன ஊடல்கள் இருக்கலாமே தவிர யுத்தம் கூடாது என்று நினைவு வெச்சுக்குங்க. தலைக்கு வந்தது தொப்பியோடு போயிடுங்க. எல்லாம் நீங்க செய்துக்கிட்டிருக்கற நல்ல காரியங்க ளோட பலன்தான். பெரிய நன்மைகள் ஏற்படும். லாபங்கள் உண்டு. டாடிக்கும் டாடியாலும் நன்மைகள் நடக்கும். எந்த லாபமும் நீங்க எதிர்பார்த்த ஜெட் வேகத்தில் வராதுங்க.  சற்று நிதானமாய்த்தான் வரும். மனசளவில் தயாராயிருங்க. அப்பதான் ஏமாற்றம் இருக்காது.

கும்பம்

பொறுங்க பொறுங்க. சமைத்து முடிக்கும் வரை காத்திருந்தீங்க. ஆனால் கொஞ்சம் வெயிட் பண்ணி ஆறும் வரை காத்திருக்க முடியாதா என்ன? உங்களால் முடியுமே. நீங்க எதிர்பா பார்த்துக் காத்துக்கிட்டிருக்கற அத்தனை நன்மைகளும் இதோ உங்க வீட்டு வாசல்ல வந்து நின்னாச்சு. மேலும் குழந்தைங்களாலும் நன்மையும் லாபமும் மகிழ்ச்சியும் திருப்தியும் ஏற்படும். இத்தனை நாளாய் இருந்து வந்த செலவுகளும் வீண் விரயங்களும் முடிவுக்கு வந்தாச்சு. பணம் ஏமாந்தீங்களே.. அதெல்லாம் திரும்பக் கிடைக்கும். வெளிநாட்டுப் பணம் வரும்

மீனம்

எல்லாம் நல்லாத்தானே போயிக்கிட்டிருக்கு? பின் எதுக்காக அடிக்கடி நல்ல மூடைக் கெடுத்துக்கிட்டு எரிச்சலும் அவஸ்தையும் படறீங்க? வெளிநாட்டிலிருந்து நன்மையும் லாபமும் வரும். குழந்தைகளால் சந்தோஷமும் நிம்மதியும் அதிகரிக்கும். சில்லறைச் சண்டைகளை மூட்டை கட்டி வெய்யுங்க… பெரிய வாய்ப்பு ஒன்று உங்களை வந்தடையும். எதற்கு மறுக்கணும்?  சந்தோஷமாய் ஒப்புக்குங்க. அதுக்குப் பிற்காலத்தில் சந்தோஷப்படு வீங்க. சகோதர சகோதரிகளின் புகழ் அதிகரிக்கும். அவங்க உங்களை நிறைய மதிப்பாங்க. ஹாப்பீ?