மேஷம்
உடல் ஆரோக்கியத்துல அக்கறை காட்டணுங்க. ஒரே நேரத்துல பல வேலைங்களைச் செய்ய வேண்டிய சூழல் இருக்கும். அதனால என்ன? ஜமாய்ச்சுடுவீங்க. பல வாய்ப்புகள் தேடி வரும் அதை சரியாக பயன்படுத்திக்க முயற்சி செய்தால் சூப்பர் பலன் கெடைக்கும். புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால் விரும்பிய வெற்றியை எதிர்காலத்துல அடைவீங்க. வாரத்தின் நடுவில் சில நல்ல செய்திகள் தேடி வரும். உங்களோட பயணத் திட்டங்கள் நற்பலனை தரும். புதுசா அறிமுகமானவங்களின் முழு ஆதரவை பெறுவீங்க. உத்தியோகத்துல புதிய பொறுப்புகள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய வாரம். காதல் விவகாரத்துல இன்னும் கொஞ்சம் அதிக கேர்ஃபுலா இருங்க. அதாவது.. நண்பர்கள் கிட்ட உங்க லவ் விஷயங்களை டிஸ்கஸ் செய்யாதீங்க. குடும்பத்துல சுப விஷயம் உண்டு.
ரிஷபம்
புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. போட்டித் தேர்வு, விளையாட்டு போட்டிகளில் ஈடுபடக் கூடிய மாணவர்களுக்கு சிறப்பான வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கையில் இனிமை நிறைந்திருக்கும். காதல் துணையின் முழு ஆதரவை பெறுவீங்க. உங்களோட பேச்சுல நேர்மையும் உண்மையும் நியாயமும் இருக்கும் என்பதால பிழைச்சீங்க. எந்தக் காலத்துலயோ உங்களுக்கு உதவி செய்த.. உங்க முன்னேற்றத்துக்குக் காரணமானவங்களை மறக்காதீங்க. எடுத்த விஷயம் ஆரம்பத்துல தடைபட்டாலும் பின்னர் நல்லபடியா நடந்து முடியும். மனசுல எதைப் பத்தியாவது சிந்திச்சபடி இருப்பீங்க. வாழ்க்கையை ரசிச்சு அனுபவிப்பீங்க. நீங்க மிகவும் மதிக்கக்கூடிய நபர் ஒருத்தர் ஒங்களைப் பாராட்டுவாரு. பிரதர்/ சிஸ்டர்னா கொஞ்சம் அப்டி இப்டி சண்டை சச்சரவு இருக்கத்தான் செய்யும். அதுக்குப் போயி கவலைப்படுவீங்களாக்கும்?
மிதுனம்
இந்த வாரம் அதிர்ஷ்டத்தின் மூலம் ஆதரவைப் பெறுவீங்க. திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் நிறைவேறும். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும். நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக கடின உழைப்பு தேவைப்படும். அதை மட்டும் நீங்க செய்துட்டீங்கன்னா… பிரமாதமான பலன் கெடைக்குங்க. நேர்மறையான சிந்தனையுடன் செயல்பட வேண்டியது அவசியம். குடும்பத்திலும் சரி, அலுவலகம் தொடர்பான பிரச்சனைகளை டீல் செய்யும்போதும் சரி… நிதானமாக கையாண்டு நிம்மதியான முடிவைக் காணுவீங்க. அதோடு .. கூடுதலா அனுபவம் உள்ளவங்களோட ஆலோசனை பெறவும் தவறாதீர்கள். வார இறுதியில் உங்களோட நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களிடமிருந்து மூலம் ஆதரவை பெறுவீங்க. சோஷல் மீடியாவுல அளவோடு ஈடுபடுங்க. அதிகம் வெளிப்படுத்த வேணாம்.
கடகம்
பிஸினஸ் அல்லது தொழில்ல மிதமான லாபம் கிடைக்கும். ஆபீஸ்ல மேலதிகாரிகளின் அதிருப்தியை அழகாய் சமாளிச்சு அவங்களைத் திருப்திப்படுத்திடுவீங்க. கொஞ்சம் மெனக்கெட்டாலும் ரிசல்ட் நல்லபடியா இருக்கும் என்பதால மனசுல திருப்தியும் நிம்மதியும் நிலவும். பெண்கள் உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்கணும்ப்பா. நீங்க ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் பேச்சில் கவனம் அவசியம். இந்த வாரம் நேரத்தை சரியாக பயன்படுத்தி வெற்றி காணுவீங்க. முடிந்த வரை யாருக்கும் வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம். ஆபீஸ்ல புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. நிறையச் செலவு. செலவுக்கு மேல செலவு.. ஏகப்பட்ட செலவுன்னு நெறைய ஏற்பட்டாலும் மனசுலயும் முகத்துலயும் குதூகலம் நிரம்பி வழியும். ஆமாங்க.. ஒவ்வொரு செலவும் உங்களுக்கு அவ்வ்வ்வ்ளோ சந்தோஷத்தை அள்ளித் தரப்போகுது
சிம்மம்
காதல் விவகாரங்களில் அவசரம் வேணாம். ரொம்பப் பெரிய வெவகாரங்களையும்.. எதிர்காலத்தை டிசைட் செய்யும் விஷயங்கள்லயும் கல்யாணம் மாதிரியான முக்கிய சமாசாரங்கள்லயும் முடிவெடுக்கும் சமயங்கள்ல ரொம்பவே கவனம் தேவை. எஸ்பெஷலி அசையும், அசையா சொத்து வாங்க நினைப்பவர்கள் முடிவுகளை சில நாட்கள் தள்ளி வைப்பது நல்லது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். வாழ்க்கைத் துணையின் உணர்வுகளை புறக்கணிக்காதீர்கள். காதல் விவகாரத்தில் கவனமாக முடிவெடுக்கவும். பிஸினஸ் அல்லது தொழில்ல மந்தமான சூழல் இருக்கும். மூலதனம் முதலீடு விஷயங்களில் அவசரம் காட்ட வேண்டாம். எதைப் பற்றியும் கவலைப்படாதீங்க. நிலைமை இன்னும் ஓரிரு வாரங்கள்ல சூப்பரா சீரடைஞ்சுடும். கணவன் மனைவிக்கிடையே விவாதங்கள் வந்தா பெரிய சண்டையாக்காதீங்க.
கன்னி
பணவரவு தேவையான அளவுக்கு இருக்கும். வீண்செலவுகளும் இல்லை. புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம். கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிப்பது மிகவும் அவசியம். திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் மாதிரியான முயற்சிங்களை வாரத்தின் பிற்பகுதியில மேற்கொள்ளுங்க. உங்களை ராத்திரியும் பகலுமாய்ப் பயமுறுத்திக்கிட்டிருந்த ஆரோக்யப் பிரச்சினையெல்லாம் போயே போச். ரைட்டா? தேவையில்லாமல் கோபமும் வேண்டாத இடத்துல தைரியமும் வந்தால் அதுக்கெல்லாம் குட்பை சொல்லிடுங்கப்பா. நீங்க கல்யாணமான லேடியா? ஒங்க ஹஸ்பெண்டுக்கு வங்கிக் கணக்கில் டிஜிட்ஸ் கூடும், கொஞ்சம் தெனாவெட்டாத்தான் பேசுவாரு, கண்டுக்காம விடுங்க, தானா இறங்கி வருவாரு.
துலாம்
மனசுல நல்ல எண்ணங்கள் மட்டுமே இருக்கும்படியா பார்த்துக்கறது நல்லது. குறுக்கு வழியில சம்பாதிக்கவோ … லாபம் பார்க்கவோ யாராவது நண்பர்கள் அல்லது சிநேகிதிங்க ஆலோசனை கூறினால் அவங்க இருக்கும் திக்கைப் பார்த்து.. கையைத் தலைக்குமேல உயர்த்தி, ஒரு கும்பிடு போட்டுவிட்டு உங்க மனசாட்சியோட பேச்சுக்கு மட்டும் காதைக் குடுங்கள், இல்லாட்டி சிரமப்படப்போவது யாருன்னு நான் சொல்லவும் வேணுமா? ஒரு வேளை வயசுலயும் அனுபவங்கள்லயும் பெரியவங்க யாராச்சும் நல்ல அட்வைஸ் குடுத்து உங்களை நல்வழிப்படுத்தும்படி சொன்ன அந்த அட்வைஸ்க்குக் காது குடுத்து மதிப்பளிக்கவும் தயங்காதீங்க. ஆபீஸ்ல வேலைச் சுமை அதிகரிக்கும். சமாளிச்சுடுவீங்க. தேவையில்லாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். பணிகளில் கூடுதல் கவனம் தேவை. மெயில் அனுப்புமுன் சரிபாருங்க.
சந்திராஷ்டமம் : ஜனவரி 9 முதல் ஜனவரி 11 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
உங்க கிட்ட நெறையப் பாராட்ட வேண்டிய விஷயங்களும் கூடுதல் பிளஸ் பாயின்ட்களும் இருந்தாலும்கூட.. தன்னம்பிக்கையே இல்லையே ஏன்? உங்க திறமையை ஒங்களக்கே எடுத்துச் சொல்ல வெளியிலிருந்து ஆள் தேவையா? நீங்களே கண்ணாடியில் பார்த்து “உன்னைப்போலத் திறமைசாலி உண்டா. உன்னை நம்பு” என்று சொல்லிக்கிட்டே இருங்க. அடுத்த வாரமே சாதனைகளை ஆரம்பிச்சுடுவீங்க. பாருங்களேன். பிஸினஸ் அல்லது தொழில்ல விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் இந்த வாரம் தவிர்க்கவும். சக வியாபாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்மணிகளுக்கு சாதனை வாரம். பொறுமையைக் கடைப் பிடிப்பது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் ஆபீஸ்ல மத்தவங்களோட பாராட்டைப் பெறுவீங்க. குழந்தைங்களால பெருமை வரும்.
சந்திராஷ்டமம் : ஜனவரி 11 முதல் ஜனவரி 14 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு
பணவரவு கணிசமாக உயரும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சாதிக்கவேண்டும் என்ற மன உறுதி ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீங்க. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீங்க. வாகனம்..உணவு.. உடை எல்லாமே சந்தோஷம் தரும் வாரம். கடந்த கால பிரச்னைங்க அத்தனைலேயிருந்தும் விடுபட்டிருப்பீங்க. வேளை வந்துவிட்டது.. வேலைக்கும் மாலைக்கும் சேர்த்து ஒரு சேர நேரம் வந்தாச்சு. நல்ல யோகம் வந்தாச்சு. அம்மாவின் உடல் நிலையின் மேல் கொஞ்சம் அக்கறை வைக்கணுங்க. புது வீடு/ ஃப்ளாட் வாங்கப் போறீங்க, கங்கிராட்ஸ். செலவு சந்தோஷம் குடுக்கும்.
சந்திராஷ்டமம் : ஜனவரி 14 முதல் ஜனவரி 16 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
வேலை மாற எண்ணம் இருந்தால் அவசரம் வேணாம். யோசிச்சு டிஸைட் பண்ணுவது நல்லது. என்னடா இது எல்லாமே நிதானப்போக்குல.. நத்தை வேகத்துல நகருதேன்னு சலிச்சுக்காதீங்க பிளஸ் கவலைப்படாதீங்க. நல்லபடியா நகர்ந்துக்கிட்டிருக்கே.. நிற்காமல்னு சந்தோஷம்தானே படணும் நீங்க? குடும்பத்தோட நண்பர்கள் அல்லது ரிலேடிவ்ஸ் வீட்டு விருந்து விசேஷங்களுக்குச் சென்று வருவீங்க. உறவினர்களால உதவி கிடைக்கும் அதே நேரத்தில் அவர்களில் ஒரு சிலரால சிறு உபத்திரவமும் ஏற் படலாம். உறவினர்கள் வகையில் சற்று பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத்துணைவழி உறவுகள் உங்களோட ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் மத்தியில் உங்களோட கௌரவம் ஒரு படி உயரும். பட்.. பழி வரும்படியான செயல்கள் எதையுமே செய்யாதீங்க.
கும்பம்
வருமானம் சுமாராகத்தான் கிடைக்கும். வார முற்பகுதியில் வீண் விரயம் ஏற்பட சாத்தியமுள்ளது. சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகளைச் சந்திக்க நேரிடலாம். அரசாங்க வகையில் கிடைக்கவேண்டிய அனுமதிகள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படலாம். இப்போ உங்க தேவையெல்லாம் பொறுமை பொறுமை பொறுமைதாங்க. குழந்தைங்களால ஏற்பட்ட டென்ஷன்ஸ் குறைய ஆரம்பிக்கும். சில உறவுக்காரங்களோ டாமினேஷன் எரிச்சல் தரும். ஒங்களுக்கு நல்லது செய்தவங்களை அற்பக்காரணுங்களுக்காக அலட்சியப்படுத்தாதீங்க. அனுசரிச்சுப்போங்க. குடும்பத்துல யாருக்கேனும் மெடிகல் செலவு வர்க்கூடும். எனினும் உங்களுக்கு முன்யோசனை அதிகம். காப்பீடும் இருக்கும். மனசும் ரெடியாக இருக்கும். வாரத்தின் முற்பகுதில, ஒங்களோட உற்றார் உறவினர்களிடையே சுமூக உறவு நீடிக்கும். பழிகள் வராம கவனமா இருங்க.
மீனம்
புது முயற்சிங்களைத் தவிர்க்கறது மட்டுமில்லாம, வியாபாரத்தை விரிவு படுத்தும் முயற்சிகளையும் தவிர்க்கப்பாருங்க. ஏற்கனவே செய்துக்கிட்டிருந்த வேலை அல்லது பிஸினஸ்ஸி நல்லபடியா கவனமா செய்தாலே போதுங்க. சகோதர சகோகரிங்க நன்மை செய்வாங்க. ஆரோக்கியம் சூப்பரா இருக்கும். கணவர் அல்லது மனைவிக்கு நன்மைகள் நடக்கும். செலவு அதிகமாயிருக்கும்தான்.. ஆனால் வரும்படியும் கூடுதலாகப்போகுதேம்மா. அலுவலகத்தில் நிம்மதிப் பெருமூச்சு விடும்படி ஆடிட்டிங் முடியும். கடன் கிடன் என்று இப்போதைக்கு எதிலும் இறங்க வேண்டாம். லோன் மனு எதிலும் கையெழுத்து கைநாட்டு என்று ஆட்டோகிராஃப் போட்டுவிட்டு அப்புறம் புலம்பாதீங்க, அட்வான்ஸாச் சொல்லிப்புட்டேன். குழந்தைங்களால சந்தோகும் கெடைக்கும். அரசாரங்க உத்யோகத்துல உள்ளவங்களுக்கும் அரசியல்வாதிங்களுக்கும் நல்ல டைம் நடக்குது.