மேஷம்
ஆஃபீஸருங்களோட ஆதரவும், சலுகைகளும், ஹெல்ப்பும், சப்போர்ட்டும் கெடைக்குங்க. உங்களோட சுய முயற்சியால வீட்ல மகிழ்ச்சி பொங்கும். பழைய முயற்சிகளால புதிய சக்ஸஸ் வரும். உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். அதிக லாபத்தோட புதிய பணி/ பிசினஸ் வாய்ப்பு வந்து சேரலாம். நண்பர்களுக்கு உதவி செய்து நெகிழ்ச்சியளிப்பீங்க. பெண்களால் நன்மையடைவீங்க. இந்த வாரம் புதன்கிழமை நல்ல நியூஸ் ஒண்ணு வரும். பரபரப்புகள் குறைந்து நிம்மதி அதிகரிக்கும். உற்சாகமான.. ஹாப்பியான .. குதூகலமான வாரம். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். முக்கியமான பிரச்சினை ஒன்றில், நல்ல முடிவெடுப்பீங்க. சிக்கலான ஒரு விஷயத்திலும் குழப்பம் இல்லாமல் முடிவு எடுத்து உங்களுக்கும் கம்பெனிக்கும் நிம்மதியும் பெருமையும் ஏற்படுத்திக் குடுப்பீங்க. லாபமும் வருமானமும் அதிகமாகும்.
ரிஷபம்
பொழுது போக்கு அம்சங்கள் ஒரு பக்கம் இருந்துக்கிட்டிருந்தாலும் கடமையில் கண்ணாயிருப்பீங்க. நீங்க நெனைச்சபடியே செயல்கள் நடந்துக்கிட்டிருக்கும். புதுப்புது விஷயம் கத்துக்கறதுல இன்டரெஸ்ட் ஏற்படும். சிறு தடை இருந்தாலும் அவற்றை முறியடிச்சு முன்னேறுவீங்க. ஒவ்வாத உணவுகளைச் சாப்பிட்டதில் ஏற்பட்ட தொல்லை தீரும். குடும்பத்துல முன்னேற்றமான போக்கு காணப்படும். நட்பால நன்மை கெடைக்கும். உழைப்பின் பலன் சிறப்பா இருக்கும். தொழில் ரீதியா எடுத்த கூட்டு முயற்சில சக்ஸஸ் சற்றுத் தாமதமாகும். நீங்க கத்துக்கிட்ட .. படிச்ச… கல்வி/ கலை கைகொடுக்கும். உத்தியோகத்துல உள்ளவங்க உயரதிகாரிகளின் ஆலோசனைப்படி அவசரமான ஜாப் / பிராஜக்ட் ஒன்றைச் செய்து பாராட்டுப் பெறுவீங்க. ஃபேமிலியில் இனிய சம்பவங்கள் நடைபெறும். பல காலமா காத்துக்கிட்டிருந்த ஷேர்மார்க்கெட் லாபங்களை இந்த வீக் நிச்சயமா எதிர்பார்க்கலாம்.
மிதுனம்
குடும்பத்துல உள்ள ஒருவருக்குக் கூடுதல் வருமானம் வரும். ஆரோக்கியம் சீரா இருந்துக்கிட்டிருக்கும். புது முயற்சில கவனம் போகும். கூடப்பொறந்தவங்களால ஆதாயம் உண்டு. சிலருக்கு நிலம் அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு கெடைக்கும். வீட்டுல விருந்தினர் வர்றதால ஹாப்பியான சூழ்நிலை நிலவும். நியாயமான தைரியம் ஏற்படறதால நல்ல விஷயத்தில் உங்க துணிச்சல் வெளிப்பட்டு நல்ல ரிஸல்ட் குடுக்குங்க. பயணம் செல்ல நேரிடலாம். சிறிய அளவிலாவது சக்ஸஸ் உண்டாகும். மத்தவங்களுக்கு உதவ முன்வருவீங்க. ஹஸ்பெண்ட் அல்லது ஒய்ஃப் மூலம் லாபம் கெடைக்குங்க. குடும்ப வாழ்க்கைல சுகமும், நிம்மதியும் கெடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்துக்கிட்டிருந்த போட்டிகள் விலகும். பார்ட்னருடன் இருந்த பிராப்ளம்ஸ் எல்லாம் தீர்ந்து பிசினஸ் வளர்ச்சி பெறும்.
கடகம்
வயிறு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட சிறு உடல் உபாதைகள் வந்தாலும்கூட உடனுக்குடன் இந்த வாரமே சரியாயிடுங்க. கணவர் அல்லது மனைவியின் ஐடியா உங்க முன்னேற்றத்திற்கு யூஸ் ஆகும். வெளியூர் பயணங்களில் எச்சரிக்கையுடன் இருந்துட்டீங்கன்னா நோ பிராப்ளம். திடீர் லக் ஒண்ணை எதிர்பார்க்கலாம். மத்தவங்க சொல்ற விமர்சனத்தைக் கண்டுக்காதீங்க. அது பத்திக் கவலைப்படவும் வேணாம். தேவையற்ற வாக்குவாதங்கள் எதுவும் செய்ய வேணாம். தவறு செய்யும் ஃப்ரெண்ட்ஸ் கிட்டேயிருந்து தள்ளி வந்துடுங்க. நல்லவங்களோட வழிகாட்டுதல் கெடைக்குங்க. பெரிய லாபங்களை எதிர்பார்க்க முடியாதுன்னாலும் நஷ்டம் எதுவும் வராதுங்க. குடும்பத்துல கலகலப்பான சூழ்நிலை உருவாகும். புதிய திட்டமெல்லாம் தீட்டி அதுல வெற்றியும் அடைவீங்க. தொழில் செய்பவர்களுக்கு, வேலைப்பளு அதிகரித்தாலும், கவலை வேணாம். அதற்கு ஏற்ற வருமானம் வந்து சந்தோஷப்படுத்தும்.
சிம்மம்
பணம் வருவது தடைபடாது. பார்ட்னர்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கெடைக்குங்க. பணியில் இருப்பவர்கள் வேலைப்பளு இருந்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பால் அது குறையும். கணவரால்/ மனைவியால் நன்மைகள் நிகழும். வீட்டில் உற்சாக சூழல் நிலவும். பேச்சினால் பிரச்னைங்கள்ல மாட்டாமல் இருக்கப் பாருங்க. அக்கம்பக்கத்தினருடன் இருந்துக்கிட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். சொன்ன சொல்லை காப்பாத்துவீங்க. பணவரவு திருப்தி தரும். அடுத்தவங்களோட பிரச்னைங்கள்ல தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வீட்ல சுபகாரியங்கள் நடக்கலாம். மேரேஜ் முயற்சிகள் கைகூடும்.துணிச்சலோடு செயல்பட்டு தொல்லைகளை அகற்றிக் கொள்ளும் வாரம். தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வீங்க. லோன் போட்டுக் காத்திருந்தா அது பற்றி இந்த வாரம் நல்ல நியூஸ் வரும்.
சந்திராஷ்டமம் : மார்ச் 31 முதல் ஏப்ரல் 2 வரை
கன்னி
உழைப்புக்கேற்ற பலன் அடைவீங்க. மனசுல இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி நிலவ ஃப்ரெண்ட்ஸ்லாம் உதவுவாங்க. ஸ்டூடன்ட்ஸ் ரொம்பவும் அதிக முயற்சியுடன் கவனத்தைக் குவிக்க வேண்டியிருக்கும். அலட்சியமின்றிச் செயல்படுவது நல்லது. தொழில் பிஸினஸில் சுமாரான முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த லோன் வசதி கிடைப்பதில் துரிதமான பலன் இருக்கும். பணியாளர்கள் கொஞ்சம் கவனமாய்ப் பணிகளை கவனிப்பது நல்லது. மத்தவங்களோட வெவகாலத்துல தலையிடாம இருக்கறது ரொம்பவே நல்லது. பணத்தைக் கையாளும்போது மிகுந்த கேர்ஃபுலா இருங்க. முன்னேற்றத்துக்கான முயற்சிகள் லாபம் தரும். பிசினஸ் பீப்பிள், உற்சாகத்துடன் பணியாற்றி நல்ல பலனைப் பெறுவீங்க. எல்லா கஷ்டங்களும் நீங்கி நிம்மதி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். முயற்சிகள் சாதகமான பலனைக் குடுக்கும்.
சந்திராஷ்டமம் : ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 4 வரை
துலாம்
ஒவ்வொரு செயலிலும், பேச்சிலும் ரொம்பவே கவனமா இருங்க. குடும்பத்துல நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். மன வருத்தத்தில் விலகிய ரிலேடிவ்ஸ்ஸும் ஃப்ரெண்ட்ஸும் மறுபடியும் வந்து சேருவாங்க. கணவன், மனைவிக்கிடைல சந்தோஷமான உறவு இருக்கும். பிள்ளைங்க, கல்வியில் மேன்மை அடைவது பற்றித் தீவிரமாக முனைவாங்க. அடுத்தவங்களோட தவறை அழகா சுட்டிக்காட்டித் திருத்துவீங்க. புது விஷயங்கள் கத்துக்கறதுல ஆர்வம் உண்டாகும். தாயாருக்கு நன்மை உண்டாவதில் சற்று நிதானப்போக்கு நிலவக் கூடும். அலுவலக வேலைங்கள்ல முழு கவனம் செலுத்தி வெற்றியடைவீங்க. பொருளாதார முன்னேற்றமும், புதிய பொருள் வரவும் இல்லத்தில் மகிழ்வைத் தரும். முயற்சிகளில் முன்னேற்றமான பலன்களைப் பெறுவீங்க. உத்தியோகஸ்தர்கள், சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
சந்திராஷ்டமம் : ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 7 வரை
விருச்சிகம்
மத்தவங்களுக்கு ஆலோசனை சொல்லும் போது ரொம்பவே கவனம் தேவை. குடும்பத்துல நிலவிய பிரச்னை ஒண்ணு முடிவுக்கு வரும். திருப்தியான நிலை காணப்படும். வாகனங்களை பயன்படுத்தும் போது கொஞ்சம் கேர்ஃபுலா இருங்க. மறைமுகமா உங்களைக் குறை சொன்னவங்க தங்களோ தவறை உணர்வாங்க. ரொம்ப நாளா முயற்சி செய்த ஒரு விஷயம் நல்லபடியா முடியப்போகுது.. அதனால மனமகிழ்ச்சி ஏற்படும். முயற்சில வெற்றியைக் குறிக்கோளாக கொண்டு முன்னேறுவீங்க. எதிர்பார்த்த நன்மைகள் கெடைக்குங்க. வீண் செலவைக் குறைப்பதில் வெற்றி காண்பீங்க. பழைய விருப்பங்கள்ல ஒண்ணு ரெண்டு நிறைவேறும். எதிர்பாலினத்தவரால் லாபம் கெடைக்குங்க. வெளியூர்/ வெளிநாட்டில் தங்க நேரிடலாம். பிசினஸ் பீப்பிள், உற்சாகத்துடன் பணியாற்றினாலும், பலன்கள் தாமதமாகும்.
தனுசு
கோபத்தைக் குறைச்சுக்கிட்டு மத்தவங்களை அனுசரிச்சுப் போனீங்கன்னா, ஷ்யூரா முன்னேற்றம் காண முடியும். ஆபீஸ்ல கடுமையா உழைக்க வேண்டி இருக்கும். ஸோ வாட்.. உற்சாகமும் குதூகலமும் குறையாது. பதவி உயர்வு வருவதில் தாமதம் ஏற்படும். புது வேலை தேடறவங்களுக்கு நல்ல நியூஸ் உண்டு. குடும்பத்துல பிரச்னை தலைதூக்கினாலும் இந்த வாரத்திலேயே நல்லபடியாகத் தீர்ந்து நிம்மதி வந்துடுங்க. கணவருக்கு/ மனைவிக்கு வாழ்க்கைல முன்னுக்கு வர்ற வாய்ப்பு ஒண்ணு ஏற்படும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். எடுத்த செயலைச் செய்து முடிப்பது பற்றிய குழப்பம் ஏற்பட்டு அந்தக் குழப்பம் இந்த வாரமே நீங்கும். தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். நவீனப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீங்க. காரியங்கள் அனைத்திலும் முன்னேற்றமான பலன்களைப் பெறுவீங்க.
மகரம்
யோகமான வாரம். மன உறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியப்பட வைப்பீங்க. புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கெடைக்குங்க. தொழில் /வியாபாரம்/ பணியை மாத்தணும்னு நெனைச்சீங்கன்னா, அதை நீங்க பலமுறை யோசிச்சு செய்ங்க. இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க சான்ஸ் இருக்குங்க. குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான சில பொருட்களை வாங்கிக் குடுப்பீங்க. பர்சனலாவும் சில காஸ்ட்லி பொருட்களை வாங்குவீங்க. எதிர்பார்த்த வருமானத்தை அடையப் பாடுபடுவீங்க. குடும்பத்துல சுப நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடக்கும். பேச்சில் மென்மையும் நியாய உணர்வும் அதிகமாகும். மத்தவங்ககூட இருந்த கருத்து வேற்றுமை குறையும். எந்த ஒரு வேலையையும் மனநிறைவோட செய்வீங்க. பேச்சினால் நல்ல விஷயங்கள் நடக்கும். ஸோ.. ஒங்க மனசுல சந்தோஷம் உண்டாகும்.
கும்பம்
மனசுல தேவையேயில்லாத கற்பனைங்களால திடீர் குழப்பம் ஏற்பட்டு இந்த வாரமே அது நீங்கும். வாகனங்கள்ல போகும்போதும் வெளியூர்களுக்கு செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவை. செலவைக் கொஞ்சம் கட்டுப்படுத்திக்குங்கப்பா. பணத் தட்டுப்பாடு முன்னே இருந்ததைவிடவும் கொறையலாம். மாணவர்களுக்கு சக மாணவர்களின் கோ-ஆபரேஷன் இருக்கும். மகன்/ மகளால் இருந்துக்கிட்டிருந்த கவலைங்களும் குழப்பங்களும் நீங்கி அப்பாடான்னு நிம்மதி ஏற்படும். எதிலும் சாதகமான பலன் கெடைக்குங்க. சின்னச் சின்னச் செலவுங்க இருந்துக்கிட்டிருக்கும். ஆனா அதெல்லாம் சந்தோஷமும் மன நெறைவும் தரும். தொழில் அல்லது பிசினஸ்ல எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். பணியில் இருக்கறவங்க மேலதிகாரிகளை அனுசரிச்சு நடந்து அதனால நன்மை காண்பீங்க.
மீனம்
சோம்பலைத் தவிர்ப்பது நல்லது. ஆபீஸ் தொடர்பான பணிகள் கொஞ்சம் தாமதப்பட்டாலும்கூட நல்லபடியா முடிஞ்சுடும். குடும்பத்துல இருக்கறவங்க கூட, ஹாப்பியாப் பொழுது போகும். தள்ளிப்போட்ட விஷயங்களை உடனுக்குடன் முடிச்சுடப் பாருங்க. கற்பனை பயங்களால் கவலை அடைய வேணாம். ஃப்ரெண்ட்ஸ்கூட இத்தனை நாளறா இருந்துக்கிட்டிருந்த மனஸ்தாபங்கள் விலகும். வாக்கு வாதங்கள் எதுவும் செய்ய வேணாங்க. ஏதாச்சும் விவாதம் நடந்துக்கிட்டிருந்தா அந்த எடத்தைவிட்டு நீங்க வாயை மூடிக்கிட்டு நகர்ந்து வந்துடுங்க. கடன் குடுக்கறதையும் வாங்கறதையும் தவிர்ப்பது நல்லது. எப்போதோ செய்த கடும் முயற்சிகள் இந்த வாரம் பலன் தரும். ஒங்களோட வளர்ச்சில இருந்துக்கிட்டிருந்த முட்டு கட்டைங்க நீங்கும். மத்தவங்களுக்கு உதவி செய்யணும் என்ற எண்ணம் உண்டாகும். பழைய நண்பர்/ தோழியை மீட் செஞ்சு ஹாப்பியா பேசிக்கிட்டிருப்பீங்க. கவலையெல்லாம் மறந்துடும்.