மேஷம்

குடும்பத்துல மங்கள நிகழ்ச்சிகள் நடக்க வழிபிறக்கும். அது பற்றி இவ்ளோ காலம் இருந்துக்கிட்டிருந்த தடைகள் நீங்கும். மெடிக்கல் செலவுங்க குறையும். மம்மியின் உடல் ஆரோக்கியம் முன்பைவிட நல்லாயிடும். வாழ்க்கை துணையுடன் இருந்துக்கிட்டிருந்த பிணக்குகள் நீங்கும். ரொம்ப காலமாய்த் தாமதப்பட்டுக்கிட்டிருந்த சொத்து வந்து சேரும்.  தொழில் சார்ந்து முடிவுகள் எடுக்கும் போது நீண்ட ஆலோசனை தேவை. அதிகம் உழைக்க வேண்டியது இருக்கும். ஆனாலும்கூட நல்லபடியாவும் வெற்றிகரமாகவும் முடியும். பொருளாதாரத்தில் தன்னிறைவு ஏற்படும்.  அரசாங்க அனுகூலம் ஏற்படும். குழந்தைகள் சார்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைக் கொடுக்குமுங்க.  மகிழ்ச்சியான சுப நிகழ்வுகள் நடக்கலாம். தைரியம், தன்னம்பிக்கை மட்டும் குறையாமல் கண்டிப்பா கேர்ஃபுல்லா இருங்க. பேச்சினால நல்ல ரிசல்ட் உண்டாகும். ஆபீஸ்ல பாராட்டுவாங்க.

ரிஷபம்

இதுவரை வீடு வாங்காதவங்க , வீடு, மனை வாங்கப்போறீங்க. அதுக்கான யோகம் ஏற்படப்போகுதுங்க. உடல் ஆரோக்கியம் நல்லாவே இருக்கும். டாடி பற்றிய விஷயங்கள் அனுகூலமாக இருக்கும். வாழ்க்கையில் இதுவரை செய்யாத சாதனை ஒன்றை.. நல்ல முயற்சி எடுத்துச் செய்வீங்க. பெண்களுக்கு லாபம் கிடைக்கும். மருத்துவத் துறையில் ஒர்க் பண்றவங்களுக்குப் பொறுப்புகள் அதிகரிக்கும். முன்பைவிட மனமாற்றம் நிகழ்ந்து … தர்மங்கள் செய்வீங்க. சேவை பிரிவில் இருப்பவர்கள் சில சின்னச் சிக்கல்களைச் சந்திக்க நேரலாம். பிசினஸ் செய்யறவங்களுக்கு, லாபம் உடனடியாக கிட்டாமல் போனாலும் பொறுமையா .. பொறுப்பா நடத்திக்கிட்டே போனால், நிரந்தரமான நன்மை கிட்டும். காதல் வாழ்வில் மகிழ்சி பொங்கும். மன அமைதியிருப்பதால் நல்ல முயற்சியுடன் எதயும் சாதிப்பது எளிது என்பதை மட்டும் நல்லா நினைவில் வெச்சுக்குங்க.

மிதுனம்

இந்த வாரமும்  போன வாரம் மாதிரியே லாபகரமானதுதாங்க . ஒங்களோட வாழ்க்கை அனைத்து வகையிலும் சிறப்பாக அமையும். ஒங்களோட துணை யுடனும் மற்றவர்களுடனும் இணக்கமான சூழல் உருவாகும். ஆரோக்கியத்தை பொறுத்தமட்டில் கொஞ்சம் அதிக கேர் எடுக்கணும். அலுவலகவாசிகள் தங்கள் வேலையில் மிகுந்த  கவனம் செலுத்தி, சிரத்தையாய்ச் செயல்பட வேண்டும். ஆரோக்யமற்ற உணவுகளை தவிர்க்கணுங்க. ஒங்களோட பொருளாதார நிலையை பொருத்தமட்டில் நோ பிராப்ளம். செல்வம் பெருகும் எனவே வங்கியிருப்பும் அதிகரிக்கும். சொந்த தொழில் செய்தாலும் பணியாளர்களா யிருந்தாலும் லாபம் அதிகரிக்கும். சமுதாயத்தில் பெயர், புகழ் மற்றும் நன்மதிப்பு அதிகரிக்கும். காதல் வாழ்வின் நிலை சுமுகமாகவே இருக்கும். மாணவர்களின் முயற்சி வெற்றியடையும்.

கடகம்

சோம்பலைக் குறைச்சுக்குங்கப்பா. எஸ்பெஷலி ஆபீசில் சுறுசுறுப்புடன் செயல்படுங்க. கேளிக்கை மற்றும் உற்சாகத்தில் கவனம் செலுத்திப் பொழுதை வேஸ்ட் செய்ய வேண்டாம். கொஞ்ச காலத்துக்குப் பணத்தைச் சிக்கனமாய்ச் செலவழிச்சுப் பாதுகாப்ப இருங்க. பிறகு முதலீடுகள் செய்ய தொடங்கலாம். இப்போ அவசரம் வேணாங்க. கணவன் மனைவிக்கிடையே, கருத்து வேறுபாடுகளுக்கு இடம் கொடுக்க வேண்டாங்க. அலுவலகம் சம்பந்தமான விஷயங்கள் தள்ளிப்போவதுபற்றி டென்ஷன் ஏற்படும்.  வெயிட். வெயிட். எல்லாம் சரியாகும்.  அக்கம்பக்கத்தினரிடையேயும், அலுவலகத்திலும் உங்க கோபத்தைக் கட்டுப்படுத்திக்கணுங்க. வாக்குவாதத்தில் ஈடுபடாமல் சுமூகமாக இருக்கப் பாருங்க. குழந்தைங்களுக்கு டென்ஷன் ஏற்படாம நடந்துக்குங்க. அவங்க உங்களுக்கு டென்ஷன் ஏற்படுத்தினால் புன்னகையுடன் சமாளிச்சுக்கிட்டுப் போங்க. எல்லாம் விரைவில் சரியாகும்.

சிம்மம்

தொட்டதெல்லாம் என கூறமுடியாது. குடும்பத்தில் ஏற்பட்டிருந்த சில பிரச்சினைகள் தீரும். புத்திசாலித்தனமாகவும் கவனமாகவும் நடந்து அந்த பிரச்சினைகளை சமாளிப்பீங்க. அப்பாவுக்கு ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் தீரும். ஆபீசில் சிறு பிரச்சினைகள் ஏற்படுத்தியவங்க காணாமல் போவாங்க. பொருளாதரம் சாதாரணமாக இருக்கும். பணியின்  எறும்பு சைஸ் பிரச்சினைகள் தோன்றலாம். எனினும் இறுதியில் வெற்றி உங்களுக்கே. பணியில் ஏற்படும் முன்னேற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டமாக அமைந்து வாழ்வை வளப்படுத்தும். வணிகர்களுக்கு வெற்றி கிட்டும். புதிய பிசினஸ் பார்ட்னர்களுடன் ஒப்பந்தம் ஏற்படலாம். காதல் வாழ்க்கை சரியான திசையில் செல்லும்.  சில காலத்துக்கு முன்பு படிப்படியாக உயர்ந்த பயம் கவலையும் சிரமங்களும் இப்போது படிப்படியாகக் குறையக் காண்பீங்க.

கன்னி

புதுமுக நபரின் அறிமுகம் கிடைக்கப்போகுதுங்க. அவங்களால நிறைய நன்மைகள் எதிர்காலத்தில் நடக்கப்போகுதுங்க. புதுவித விஷயங்களை கற்பதில் அதீத ஆர்வம் காட்டுவீங்க. பிற்காலத்தில் அதில் எக்ஸ்பர்ட் ஆவீங்க. அப்பாடா. ஒரு விஷயத்தில் சந்தோஷம். என்ன தெரியுமா? வார்த்தைகளில் நிதானம் காப்பீங்க. இதனால பிரச்சினைகளிலிருந்து தள்ள இருக்க முடியும். காலம் பொன் போன்றது என்பதற்கேற்ப, ஒவ்வொரு நொடியையும் வீணாக்காமல் பயன்படுத்துவீங்க. குழந்தைங்களுக்கு இடையே நிலவும் இன்னல்களை தீர்ப்பீங்க. மற்றவர்களின் மனசுல இடம்பிடிப்பீங்க. கிரகங்களின் சாதகமான பார்வையினால், நினைச்ச காரியங்கள் நினைச்சபடி நடக்குமுங்க. மனசுல ஆன்மிக எண்ணங்கள்  அதிகரிக்கும்.  குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவீங்க. அவங்களும் அதை நல்ல விதமாய்ப் புரிஞ்சுப்பாங்க.

துலாம்

செலவுகள் நல்ல  பலன் தரும்.சந்தோஷம் அளிக்கும். சுப காரியங்களுக்கான செலவுகள் அவை.  பல காலமா ஆட்டிப்படைச்சுக்கிட்டிருந்த முக்கியமான நிதி பிரச்னைகளிலிருந்து விடுபடுவீங்க. கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அலவலகத்தில் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவீங்க. ஒரு விஷயத்தைக் கண்டிப்பா நினைவில் வெச்சுக்குங்க.  வார்த்தைகளில் நிதானம் காத்தால், மற்றவர்களின் கோபத்திலிருந்து தப்பிக்கலாம். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்தால் மன சஞ்சலத்திற்கு தீர்வு கிடைக்கும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். அக்கா அண்ணனுங்க எல்லாம் உறுதுணையாக இருப்பாங்க. வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். அலவலகத்தில் காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீங்க. அந்தச் சந்திப்பு நல்ல ரிசல்ட் அளிக்கும்.

விருச்சிகம்

அலுவலகத்தில் மரியாதை கூடும். திட்டங்கள் நிறைவேறும் வாரம். இந்த வாரம் உங்களோட பலகால எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மகன்களும், மகள்களும் குடும்பச் சூழ்நிலை அறிந்து செயல்படுவாங்க. புண்ணிய ஸ்தலங்களுக்குப் போயிட்டு  வருவீங்க. அரை குறையாக நின்று போயிருந்த வேலைங்க முடியும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவாங்க. உத்தியோகத்துல புது சலுகைகள் கிடைக்கும். சாதிக்கும் வாரம். முன்பு எதற்கெல்லாம் போராடினீங்களோ அதெல்லாம் அநாயாசமாய் முடியும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைச்சாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிலவற்றிற்கு ஒங்களோட அவசர மனபோக்குதான் காரணம் என்பதை உணர்வீங்க. வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகளை சமாளிப்பீங்க.

சந்திராஷ்டமம் : ஜூன் 7 முதல் ஜூன் 9 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்

தனுசு

விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம். மேலதிகாரிங்களோட செயல் டென்ஷன் தரும். நீங்க எதுக்காக டென்ஷன் ஆவணும்?  கூலா இருங்க. அவங்க உங்களுக்கு நல்லது செய்யத்தான முயற்சி செய்துக்கிட்டிருக்காங்கன்னு விரைவில் புரிஞ்சுக்குவீங்க. குடும்பத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். அலுவலகத்தில் நிறையக்காலமாய்ப் பலருக்குத் தொல்லை கொடுத்துக்கிட்டிருந்த பழைய பிரச்சினைகளைத் தீர்ப்பீங்க. இதனால் எல்லோரும் பாராட்டுவாங்க. குறிப்பா மேலதிகாரிங்க கிட்ட ‘சபாஷ்’ வாங்குவீங்க. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்துல சக ஊழியர்கள் உதவுவாங்க.  நன்மை நடக்கும்  வாரம். முன்பு நீங்க உழைத்து மற்றவர்களுக்கு நல்ல பெயர் வந்துக்கிட்டிருந்தது. இப்போ உங்களைத் தேடியே பாராட்டு வரும். குழந்தைங்க கொடுத்து வந்த டென்ஷன் இன்னும் சில வாரங்களுக்கு மட்டுமே நீடிக்கும்.

சந்திராஷ்டமம் : ஜூன் 9 முதல் ஜூன் 11 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும் (உங்களுக்கு ஏழரைச் சனியும் நிலவுவதால் இரட்டிப்பு கவனத்துடன் இருங்கள்)

மகரம்

புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீங்க. நீண்ட காலப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீங்க. வழிபாட்டுத் தலங்களுக்கு யாத்திரை போக சான்ஸ் வரும். புதியவர்கள் அறிமுகமாவாங்க. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீங்க. ஆரம்பத்தில் அகலக்கால் வேண்டாம். போகப்போக பிசினஸ் பெருகும். கொஞ்சம் பொறுமையா இருங்க. குழந்தைங்களால் நன்மை உண்டாகும்.  உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீங்க. பட்… அப்படி எடுக்கறதுக்கு முன்னால் அனுபவம் பெற்ற பெரியவங்களை கன்ஸல்ட் செய்துட்டுப் பிறகு எடுக்கலாமே. உங்களோட தேவைகள் பூர்த்தியாகும் வாரம். நீண்ட நாளாக பார்க்க நினைச்ச ஒருவரைச் சந்திப்பீங்க. வர வேண்டிய பணத்தைப் போராடி வசூலிக்கும்படியா இருக்கும்.  உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீங்க. இந்த வாரம் உங்களுக்கு எதிர்பாராத உதவி கிட்டும்.

சந்திராஷ்டமம் : ஜூன் 11 முதல் ஜூன் 14 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும் (உங்களுக்கு ஏழரைச் சனியும் நிலவுவதால் இரட்டிப்பு கவனத்துடன் இருங்கள்)

 கும்பம்

தந்தை அல்லது பாட்டன் வழி சொத்து பற்றிய வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். காரியம் சாதிக்கும் வாரம் இது. எதிர்பாராத பணவரவு உண்டு.  உழைப்பு அதிகரிக்கும். முன்பெல்லாம் உழைத்த உழைப்புக்குப் பலன் இல்லாமல் இருந்தது. அல்லது குறைவான பலன் இருந்தது அல்லவா? இனி அப்படியே ஆப்போசிட். சிறிது உழைத்தாலும் நல்ல பலன் இருக்கும். போதாக்குறைக்குப் பலர் உங்களை இளக்காரமாய்ப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. இகழ்ந்த வாய்களும் உங்களைப்  புகழ ஆரம்பிக்கப்போகுது பாருங்களேன்.  வீட்டில் ஏற்பட்ட பிரச்சினைகள் நெருங்கிய சிநேகிதி/ சிநேகிதரால் தீர்த்துவைக்கப்படும். மகனால்/ மகளால் ஏற்பட்ட  டென்ஷனை அவரே தீர்ப்பார்.

மீனம்

கம்பீரமாகப் பேசிச் சில காரியங்களை முடிப்பீங்க. உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் உங்களுடைய அந்தஸ்து உயரும். சிலர் ஒங்களோட உதவியை நாடுவாங்க. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். அலுவலகத்தில் நீங்க மிக மதிக்கும் ஒருவர் உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை உங்களுக்குக் கற்றுக் கொடுப்பார். வெற்றி பெறும் வாரம் இது. வாய்ப்பை நழுவ விட்றாதீங்க. எதை எடுத்தாலும் தடை வருதே.. தாமதம் ஏற்படுதேன்னு புலம்பிக்கிட்டிருக்காதீங்க. அத்தனை தடைங்களையும் மீறியும் வெற்றியும் சந்தோஷமும் கடைசியில் கிடைப்பதைப் பாத்து சந்தோஷப்படுங்க. வீட்டை விரிவுபடுத்தி கட்டுவது குறித்து யோசிப்பீங்க. வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்வீங்க. சமூகத்தில் உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீங்க. பிள்ளைங்களைப் புதிய பாதையில் வழி நடத்துவீங்க. தோற்றப்பொலிவு கூடும். உங்க அட்ராக்ஷன் காரணமாய் எதிர்பாலினத்தைச் சேர்ந்தவங்களுக்கு உங்க மேல பிரமிப்பு மட்டுமில்லாமல் மதிப்பும் மரியைதையும்கூட வரும்.