மேஷம்
உங்க வார்த்தைகள்னால நன்மைகள் ஏற்படும். சகோதர சகோதரிகள் சாதனை செய்வாங்க. அம்மாவுக்கு உங்க உதவி தேவைப்படும் போது தாமதம் தயக்கம் சுணக்கம் வேணாம். அம்மா கூட ஃபைட்டிங் வேண்டாம். லாபமும் நன்மையும் நிதான போக்குல தான் இருக்கும். வெளிநாடு சார்ந்த நன்மைகளை நிச்சயமாக எதிர்பார்க்கலாம். ஸ்பெஷலி ஃபாரின் சம்பந்தப்பட்ட பிசினஸ் செய்யறவங்களுக்கு இந்த வாரம் அமோக அறுவடை தான். உங்கள் வார்த்தைகள் வெளியில் மிகவும் மதிப்பு வாய்ந்ததாய் இருந்தாலும் வீட்டில சண்டை சச்சரவுக்கு நீங்க காரணமா இருந்துடாதீங்க. மாணவர்களுக்கு பெரிய கவலைகளோ கஷ்டங்களோ இந்த வாரம் இருக்காது. வங்கிக் கணக்குல இருப்பு, சந்தோஷம் தரும். புது ஆளுங்களை அதிகம் நம்பிட வேணாம்.
ரிஷபம்
மனசுல பக்தி எண்ணங்களும் நேர்மையான விருப்பங்களும் சூழும். செலவுங்க இருக்க தங்க செய்யும். அதெல்லாம் சுகமான செலவுகள் தான். சந்தோஷம் கொடுக்குற எக்ஸ்பென்ஸ் தான். குழந்தைங்க வாழ்க்கையில மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரித்து உங்களை சந்தோஷப்படுத்தும். இத்தனை காலம் குழந்தைக்காக ஏங்கின உங்களுக்கு குட் நியூஸ் உண்டு. குடும்பத்துல யார் கல்யாணத்துக்கு காத்துகிட்டு இருக்காங்களோ அவங்களுக்கு கல்யாணம் நிச்சயமாகி வீட்டில் சந்தோஷ சூழ நிலை உருவாகும். அப்பாவுக்கு நல்ல செய்தி வரும். அவருக்கு உத்தியோக உயர்வோ சம்பள உயர்வோ கிடைக்கும். ரொம்ப காலமா நீங்க முயற்சி செய்துக்கிட்டு இருந்த பிரார்த்தனை அல்லது குலதெய்வ கோவில் வழிபாடு டிரிப் இப்போ நல்லபடியா முடியும்.
மிதுனம்
திடீர் லாபங்கள்.. நன்மைகள்.. சம்பள உயர்வு ஏதேனும் கிடைத்து சந்தோஷம் தரும். அம்மாவுக்கு அலுவலகத்தில் குட் நியூஸ் உண்டு. வீடு வாகனம் வாங்க நெனச்சுக்கிட்டு இருந்தவங்களுக்கு அந்த எண்ணம் நிறைவேற ஆரம்பிக்கும். சின்ன சின்ன கனவுகள் நினைவாகக் காண்பிங்க. நண்பர்களில் ஒருத்தருக்கு உங்க உதவி தேவைப்பட்டு அதை நீங்கள் செய்வதன் மூலம் அவருடைய நன்றிக்கு ஆளாவீங்க. வெளி மனிதர்கள் கிட்ட கொஞ்சம் லிமிட்டா வச்சுக்கோங்க. பெரிய அளவுல அதிர்ஷ்டம் எல்லாம் எதிர்பார்க்க வேண்டாம். அதே சமயம் உழைப்பை தைரியமா நம்பலாம். அதாவது நீங்க எந்த அளவுக்கு உழைக்கறீங்களோ அந்த அளவுக்கு லாபமும் நன்மையும் ஷுரா உண்டு..
கடகம்
நல்ல வேளையா ஆரோக்கியத்துல முழு கவனம் செலுத்திக்கிட்டு இருக்கீங்க. முன்பை விட இப்போ எல்லாம் ஆரோக்கியம் பற்றிய பயமோ கவலையோ அவ்வளவா இருக்காதல்லவா! ஆபீஸில் உங்களுக்கு ஆதரவா குரு போன்ற ஒருத்தர் கெடைப்பாரு. திடீர் செலவுகள் ஏற்படுவது போல் திடீர் வரவுகளும் உண்டு. ஆனால் வரவை விட செலவு அதிகமாக இருக்காத படி கவனமாய் இருங்க. நீங்க உத்தியோகம் பார்க்கிற இடத்துல பெரிய கவுரவம் பொண்ணும் உங்களுக்காகக் காத்துகிட்டு இருக்கு. எதிர்பாராத திடீர் கௌரவங்கள் உங்களைத் தேடி வரும். மேடை ஏறி பேசுவீங்க அல்லது பாடுவீங்க அல்லது நாடகத்தில் நடிப்பீர்கள். கைத்தட்டலும் பாராட்டும் கிடைக்கும்.
சிம்மம்
கடந்த பல வாரங்களாக உங்களுக்கு இருந்துக்கிட்டு இருந்த, பயமோ கவலையோ டென்ஷனும் இப்போ ரொம்பவே குறைந்திருக்கும். ஆரோக்கியத்தில் குறிப்பா சருமத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறைய ஆரம்பிக்கும். வழக்கம் போல உங்களோட தைரியமும் தன்னம்பிக்கையும் உங்களுக்கு கை கொடுக்கும். பேச்சில் புத்திசாலித்தனம் வெளிப்பட்டு பாராட்டை வாங்கி கொடுக்கும். ஆபீஸில் சில பெரிய பிரச்சனைகளை அனாயாசமாக் கையாண்டு பெரிய இடத்தின் பாராட்டை வாங்குவீங்க. பொழுதுபோக்கு அம்சங்களில் கொஞ்சம் அதிகமா கவனம் போகாதபடி பார்த்துக்கோங்க. ஏனெனில் அவை உங்களின் வழக்கமான கடமைகளை செய்ய விடாதபடி நேரத்தை சாப்பிடும்.
கன்னி
வாழ்க்கையில் முன்னேற்றம் தடைப்பட்டுக் கொண்டிருந்த நிலைமை மெல்ல மெல்ல மாறும். குழந்தைகளால் இருந்து வந்த பயமும் டென்ஷனும் கவலைகளும் குறையும். ஹஸ்பெண்டோட / மனைவியோட கட்டாயம் அனுசரிச்சுப் போகணும். தேவையே இல்லாத வாக்குவாதங்களுக்கு இடம் கொடுக்காதீங்க. குடும்பத்திலும் சரி வெளியிடங்களிலும் சரி.. எந்த வம்பு சண்டை நடந்தாலும் நீங்க அதுல கலந்துக்கவோ கண்டுக்கவோ வேண்டாம். கூடப்பிறந்தவங்களோட முன்னேற்றம் சந்தோஷம் தரும். அதுல உங்க பங்களிப்பும் இருப்பதால் அவங்க உங்களை மதிப்போட நடத்துவாங்க. திடீர் அதிர்ஷ்டம் ஒன்னு ஒர்க் அவுட் ஆகி உங்களை வியப்புல ஆழ்த்தும்.
துலாம்
வயிறு சம்பந்தப்பட்ட ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமா இருந்துக்கங்க. கடந்த பல வாரங்களாக குழந்தைகள் பற்றிய டென்ஷன் இருந்தது அல்லவா. அதெல்லாம் குறைந் திருக்கும். கணவர் அல்லது மனைவிக்கு வாழ்க்கையில முன்னேற்றம் உண்டு. உங்களுக்கு முக்கியமான வேலைகள் செய்ய முடியாதபடி விழாக்களுக்கும் விசேஷங்களுக்கும் போக வேண்டி வரும். உழைத்த உழைப்பு எதுவும் வீணாக்காது. அழகுணர்ச்சி அதிகமாவதோடு, கலை சார்ந்த புதுப்புது விஷயங்களை கற்பதில் ஆர்வமும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் அல்லது குடும்பத்தினர் அல்லது நண்பர்களோடு சின்னதாய் ஒரு சுற்றுலா போய் வந்து சந்தோஷப்படுவீங்க. உங்களின் பேச்சில் பலரும் மயங்கிப் பாராட்டுவாங்க
விருச்சிகம்
ஆபீஸில் நீங்க எதிர்பார்த்து கேட்டிருந்த பெரிய முன்னேற்றங்கள் கிடைப்பதற்கு கொஞ்சம் அதிகமா பாடுபட வேண்டி இருக்கும். தாயாருக்காக சிறு செலவுகள் செய்ய வேண்டி வரும். வாகனம் வாங்கவும் வீடு வாங்கவும் வேலை வந்து விட்டது. பல காலம் சந்திக்காத நபர்களையும் நண்பர்களையும் சந்தித்து சந்தோஷப்படுவீங்க. மகன் அல்லது மகள் அல்லது நிறைய உறவினர்கள் வீட்டுக்குச் சென்று சில காலம் தங்கி திரும்பி வரும் காலம் வந்து விட்டது. மனசுல தைரியமும் தன்னம்பிக்கையும் குறையாம பார்த்துக்கோங்க. உங்களோட கற்பனையே பாதி பயத்தையும் நம்பிக்கையின்மையையும் தருகிறது என்பதை நல்லா நினைவு வெச்சுக்குங்க.
சந்திராஷ்டமம் மார்ச் 7 முதல் மார்ச் 9 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்களிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
தனுசு
பல நாட்களாய் இழுத்து பறிச்சுக்கிட்டிருந்த விவகாரங்கள் நல்லபடியா முடிவுக்கு வந்து சந்தோஷத்தையும் நிம்மதியையும் உங்களுக்கு அளிக்கப் போகின்றன. கூடப் பொறந்தவங்க கூட நல்லுறவு மெயின்டைன் செய்ய பாருங்க. நண்பர்கள் பற்றி திடீர்னு சில டென்ஷன் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதிர்ஷ்டத்தை பெருசா நம்ப வேண்டாம். ஆனால் நேர்மையான உழைப்பு கைவிடவே விடாது. சின்ன விஷயங்களுக்கு பெருசா பயந்துகிட்டு இருந்தது இப்போதுதான் புரிந்து சிரிப்பீங்க. நண்பர்கள் உறவினர்கள் கூட வெளியில் போகும் போதும் பேசும்போதும் ஜாக்கிரதையா இருங்க. தொலைந்துபோய் இருந்த பொருள் ஒன்னு ரொம்ப நாளைக்கு பிறகு கிடைக்கும். மனசுக்குப் பிடித்த விஷயங்களை சாப்பிடுங்க. ஆனால் அது ஆரோக்கியத்தைக் கெடுக்காம இருக்கிறதா என்று கவனமா பார்த்துக்கோங்க.
சந்திராஷ்டமம் மார்ச் 9 முதல் மார்ச் 12 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்
மகரம்
எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து வெற்றி பெறுவீர்கள். அரசாங்க ரீதியிலான உதவிகள் கிடைக்கப் பெறுவீங்க. குடும்பத்துல கலகலப்பு இருக்கும். டோன்ட் ஒரி. கூடவே மனதில் ஒருவித கவலையும் இருந்து வரும். ஆனா அந்தக் கவலை நிச்சயமா தேவையே இல்லாத கற்பனை பயமாத்தான் இருக்கும் என்பதை நல்ல நினைவுல வெச்சுக்குங்க. தொழில் வியாபாரம் விறுவிறுப்படையும். உத்தியோகத்துல, கடந்த காலங்களில் இருந்துக்கிட்டிருந்த மந்த நிலை அடியோடு மாறும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். தொழில் விஷயமாக எடுத்து வந்த முயற்சிகள் வெற்றி பெறும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் சொல்படி நடந்து கொள்வது நல்லது. லேடீசுக்குத் தேவையான ஹெல்ப் எல்லாம் கெடைக்கும்.
சந்திராஷ்டமம் மார்ச் 12 முதல் மார்ச் 14 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்
கும்பம்
கலைத்துறையினருக்கு எடுக்கும் தொழிலில் கவனம் அவசியம். அரசியல்வாதிகளுக்கு நிலவி வந்த பிரச்னைகள் மறையும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் சுறுசுறுப்பு காணப்படும். மனசுல, தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். நல்லது எது கெட்டது எதுன்னு பிரித்து பார்த்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில திருப்பங்களால் காரிய வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபச்செலவு ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் வியாபாரம் திருப்தி தரும். அரசாங்க உதவிகள் கிடைக்கும். உத்யோகத்துல உள்ளவங்களுக்குப் புதுசா பிரமோஷன் கிடைச்சு நல்ல பதவி கிடைக்கலாம். ஆனால் எதுவுமே தடை தாமதங்களுக்குப் பிறகுதான் கிடைக்கும் என்பதை நினைப்புல வச்சுக்குங்க.
மீனம்
சிலர் கட்டளையிடுகின்ற பதவி கிடைக்க பெறுவர்.பெண்கள் புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவர். கலைத்துறையினருக்கு சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. எல்லா வகையிலும் நல்ல பலன் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து போவார்கள். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். தொழில் வியாபாரம் தொடர்பான கவலை மறையும். லாபம் கெடைக்கும்.