மேஷம்
உடல் ஆரோக்கியம் மேம்படும். தேவையான பணவரவு உண்டு. சிலருக்கு வீண்செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நீண்டநாளாகச் செல்ல நெனைச்ச புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீங்க. சிலருக்கு தெய்வப் பிரார்த்தனை களை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு பணியின் காரணமாக தற்காலிகமாகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். திடீர்னு தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப் படுத்தும். பட் அந்த டென்ஷன் உடனே நீங்கும். உறவினர் வருகை உற்சாகம் தரும். ஆபீஸ்ல பணிச்சுமை குறையும். சலுகைகளும் கெடைக்கும். வியாபாரத்துல நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் பிரச்னை எதுவும் இருக்காது.
ரிஷபம்
நீங்க பிசினஸ் செய்யறவங்களா? எனில் புதிய வாடிக்கையாளர்களின் வேலைக்கு விண்ணப்பம் செய்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கெடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சலுகைகள் கெடைக்கும். நிர்வாகத்தினரால் பாராட்டுப் பெறும் வாய்ப்பு ஏற்படும். குடும்பத்துல இதுவரை இருந்துக்கிட்டிருந்த சிறுசிறு பிரச்னைகள் நீங்கி, குதூகலம் குடிகொள்ளும். கணவன் – மனைவிக்கிடையே நெருக்கமும் பாசமும் ஒற்றுமையும் அதிகரிக்கும். பிள்ளைங்க ஒங்களோட எண்ணப்படி நடந்துக்குவாங்க. மம்மியோட தேவைங்களைப் பூர்த்தி செய்து, மகிழ்ச்சி அடைவீங்க. எதிர்பார்த்த கடனுதவி கெடைக்கும். அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகி முடியும். சகோதரர்களால் தேவையற்ற பிரச்னைங்க ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் வழக்கறிஞரின் ஆலோசனை கேட்டு நடந்து வெற்றியை நோக்கிப் போவீங்க. வெளியூர்ப் பயணம் வெற்றி தரும்.
மிதுனம்
ஆபீஸ்ல சக பணியாளர்களால் நிம்மதியும் சந்தோஷமும் கெடைக்கும். எதிர்பார்த்த சலுகை கெடைக்கும். வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். சக வியாபாரிகளுடன் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கி, சுமுகமான உறவு ஏற்படும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். பணியாளர்களுக்காக சில செலவுகள் செய்ய நேரிடும். ஆபீஸ்ல பணிச்சுமை அதிகரிச்சாலும் அதற்கேற்ப சலுகைகளும் கெடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு உற்சாகம் தரும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் டிலே ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக் கூடும் என்பதால் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைங்களால சில சங்கடங்கள் ஏற்பட்டு அன்றைக்கே நீங்கும். தந்தையுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட சான்ஸ் இருக்கறதால பேசும்போது நிதானம் அவசியம்.
கடகம்
வார முற்பகுதியில் மனசுல சிறுசிறு சலனம் ஏற்படக் கூடும். பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வீண் செலவுகளும் ஏற்படுவதற்கில்லை. நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைங்க ஏற்படக்கூடும். குடும்ப நிர்வாகத்தை கவனித்து வரும் பெண்கள், பொறுமையைக் கடைப் பிடிப்பது அவசியம். அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு கரையும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சில சலுகைகள் கெடைக்கும். வெளிநாட்டில் வேலை, வியாபாரம் செய்யறவங்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். வேலையில்லாதவங்களுக்கு நல்ல ஜாப் கெடைக்க வாய்ப்பு இருக்கு. பணியிடத்துல புதிய பொறுப்புகள் கிடைத்து உயர் பதவிக்கு வழிவகுக்கும். கடந்த காலத்தில் முதலீடு செய்த பணத்தின் பலனைப் பெறலாம்.
சந்திராஷ்டமம் : ஜனவரி 3 முதல் ஜனவரி 5 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்
மத்தவங்க கிட்ட ரொம்ப காலமாச் சிக்கிய பணம் வெளியே வரப் போகுதுங்க. நீதிமன்றம் தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வர நிறைய சான்ஸ் இருக்கு. குடும்பத்தோட வெளியூர் போகத் திட்டமிடுவீங்க. வேலை தொடர்பான பயணமும் இனிமையாக இருக்கும் அதோடுகூட நீங்க மகிழ்ச்சியையும், அமைதியையும் உணர்வீங்க. உங்கள் காதலை குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறலாம். காதல் உறவு மேம்பட்டு சந்தோஷம் தரும். பிள்ளைங்க கிட்டேயிருந்து நல்ல செய்திகள் வந்து மகிழ்ச்சி அடைவீங்க. தேவையே இல்லாத கற்பனை உலகத்துலேயிருந்து வெளியே வந்து யதார்த்தத்தை எதிர்கொள்ள நேரிடும். முழு ஈடுபாட்டோடு உழைச்சா நிச்சயம் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் மூத்த மற்றும் இளையவர்களின் ஆதரவைப் பெறுவீங்க. வியாபாரத்துல எதிர்பார்த்த லாபம் கிடைத்து மகிழ்ச்சி அடைவீங்க.
சந்திராஷ்டமம் : ஜனவரி 5 முதல் ஜனவரி 7 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
நிதி நிலை வலுவாக இருக்கும். இருப்பினும், வணிகம் தொடர்பான வேலை, முடிவுகளை மற்றவர்களிடம் விட்டுவிடாமல், நீங்களே கவனமாக செயல்படுவது நல்லது. உங்களைச் சுற்றி மறைந்திருக்கும் எதிரிகளிடம் ஜாக்கிரதை. இளைஞர்கள் விரக்தியை விட்டுவிட்டு நேர்மறையாக தங்கள் இலக்கை நோக்கி செல்ல வேண்டும். திருமண வாழ்வில் இனிமை நிலைத்திருக்கும். காதல் உறவுகள் வலுவடையும். சரியாகப் பயன்படுத்திக்குங்கப்பா. உங்க வேலையை தள்ளிப்போடுவது, ஒத்திவைப்பதைத் தவிர்க்கவும். இந்த வாரம் இளைஞர்களுக்கு கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கில் ஆர்வம் காட்டுவீங்க. வாரத் தொடக்கத்தில் தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். பயணம் இனிமையானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். முன்னேற்ற வாய்ப்புகள் காத்திருக்கின்றன. புதிய நபர்களின் தொடர்புகளால் ஆதாயம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம் : ஜனவரி 7 முதல் ஜனவரி 9 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்
பணியிடத்துல முக்கியமான மற்றும் அனுபவம் வாய்ந்த நபரின் உதவியால் சிறந்த நன்மைங்க கெடைக்கும். நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருடன் நீண்ட நாட்களாக இருந்த மனக்கசப்புகள் தீரும். பெண் தோழியின் உதவியால் தடைப்பட்ட வேலைகள் வேகம் பெறும். வானிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்களில் கவனமாக தேவை, உணவு மற்றும் பானங்களில் சிறப்பு கவனம் செலுத்தணுங்க, இல்லாட்டி வயிறு தொடர்பான பிரச்சினைங்க ஏற்படலாம். இந்த வாரம் மனம், பேச்சு இரண்டையும் கட்டுப்படுத்திக்குங்க. உங்க வார்த்தைகளில் நிதானமும், இனிமையையும் கடைப்பிடிக்கணும். கோபத்திலோ அல்லது அவசரத்திலோ எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுப்பதைத் தவிர்க்கவும். இல்லாட்டி எதிர்காலத்துல பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நல்லவங்களோட ஆலோசனை ரொம்பவும் யூஸ் ஆகும்.
விருச்சிகம்
வாரத்தின் நடுவில், உங்கள் இயல்பில் ஏதாவது ஒரு விஷயத்தில் எரிச்சல் மற்றும் பதற்றம் காணப்படும். இதன் விளைவாக, உங்கள் அன்புக்குரியவர்களும் உங்களிடமிருந்து விலகி இருப்பாங்க. இந்த வாரத்தில் நீங்கள் தனிமையாக உணரலாம். கடினமான சூழ்நிலைகளில் உங்கள் மனைவி அல்லது கணவருடன் நேரத்தை செலவிடுவதில் நிம்மதி அடைவீங்க. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் படிப்பில் கவனம் சிதறலாம். வாகனம் ஓட்டும்போது கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க. கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் சரியான நேரத்தில் வேலையை முடிக்க முயற்சி செய்யுங்கள். ஆன்ம பலம் அதிகமாகும். மனசுல கருணையும் இரக்கமும் மேம்பட்டு நல்லவங்களோட பாராட்டை வாங்கித் தரும். பெரியவங்க மற்றும் நீங்க ரொம்பவும் மதிக்கறவங்களோட ஆசிகள் கெடைக்கும். சம்பாதிக்க வழி கெடைக்கும்.
தனுசு
பணிச்சுமை அதிகமாக இருக்கும். எந்த ஒரு நபரை அதிகமாக நம்புவதைத் தவிர்த்துடுங்க. எனில் எந்த சிரமத்துக்கும் ஆளாகமல் தப்பிச்சுடுவீங்க. வியாபாரிகளுக்கு நல்ல நேரமாக இருக்கும். தொழில் செய்யறவங்களுக்கு ஏற்ற காலம். திருமண வாழ்வில் இனிமை நிலைத்திருக்கும். வாரத்தின் நடுப்பகுதியில், வீட்டில் விசேஷம், முக்கிய வேலை முடிப்பதில் பயணம் அல்லது அலைச்சல் இருக்கும். உறவினர்களின் ஆதரவால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். இளைஞர்கள் அதிக நேரத்தை வேடிக்கை மற்றும் மகிழ்ச்சியில் செலவிடுவார்கள். காதல் உறவுகள் ஆழமாகும். உங்கள் ஹஸ்பெண்ட் அல்லது ஒய்ஃப் அல்லது காதல் துணையுடன் தரமான நேரத்தை செலவிடுவீங்க. வார இறுதியில் நண்பர் அல்லது செல்வாக்கு மிக்க நலன் விரும்பிகளின் உதவியால் வீடு, மனை தொடர்பான தகராறு தீர்ந்து மனதுக்கு நிம்மதி கிடைக்கும். செலவுங்க கட்டுப்படும்.
மகரம்
எல்லாவிதமான பிரச்சனைங்களிலிருந்தும் விடுபட இந்த வாரம் உதவிகரமாக இருக்கும். வாரத்தின் தொடக்கத்தில் உங்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வேகம் பெறும். வீடு, மனை போன்ற சொத்து மற்றும் தனிப்பட்ட உறவுகள் தொடர்பான விவகாரங்களை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கறது நல்லது. உங்க செயல்களில் அபரிமிதமான மன அமைதியை அனுபவிப்பீங்க. இளைஞர்கள் பெரும்பாலான நேரத்தை பொழுதுபோக்கு விஷயங்களுக்கு செலவிடுவார்கள். தொழில் விஷயங்களில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் சாதகமான காலமாக இருக்கும். உங்கள் மரியாதை அதிகரிக்கும். வார இறுதியில் நிதி பரிவர்த்தனைகளில் மிகவும் கவனமாக இருக்கவும். வீட்டில் இருக்கும் முதியவரின் உடல்நிலை குறித்து கவனம் தேவை. காதல் உறவுகளில், நேரத்தை செலவிடுவது நல்லது. திருமண வாழ்வில் இனிமை நிலைத்திருக்கும்.
கும்பம்
உங்களோட சொல், செயலில் இனிமையை கடைப்பிடிக்கணுங்க.. ப்ளீஸ்.. இல்லாட்டி, உறவுகள் பாதிக்கப்படும். யாரையும் கேலி செய்வதைத் தவிர்ப்பது அவசியம். அண்ட் .. யார் கிட்டேயும் யார் பத்தியும் கமென்ட் பண்ண வேணாங்க. வியாபாரத்தில் புதிய திட்டங்கள், புதிய கூட்டாளிங்களோட உதவி உங்களுக்கு உதவும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் உங்களோட நலன் விரும்பிகளோட ஆலோசனையைப் பெற மறக்காதீங்க. வாரத்தின் நடுப்பகுதியில் படிப்பில் சில தடைகளைச் சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். பயணத்தின் போது உங்கள் உடல்நலம் மற்றும் சாமான்களை முழுமையாக கவனித்துக் கொள்ளுங்கள். காதல் உறவுகளில் துணையின் உணர்வுகளைப் புறக்கணிக்காதீங்க. எந்த வித்திலும் இப்போதைக்குப் பெரிய ரிஸ்க் எடுக்கும் செயல் எதுவும் வேணாம்.
மீனம்
தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் இந்த வாரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். வாரத்தின் தொடக்கத்தில், நீங்கள் ஒரு பெரிய திட்டத்தில் பணத்தை முதலீடு செய்யலாம், இது எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வியாபாரத்தில், கடந்த வாரத்தை விட சுறுசுறுப்பாக செயல்படுவீங்க, நஷ்டத்தை ஈடுகட்ட கடுமையாக உழைப்பீங்க. வார இறுதியில் அன்பானவர் அல்லது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறுவதன் மூலம் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் மனைவியிடமிருந்து /கணவரிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீங்க. காதல் உறவுகள் ஆழமாகும். திடீர் குறுகிய தூர பயணம் ஏற்படலாம். பயணம் இனிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். தொடங்கிய காரியங்களில் வெற்றி கிடைக்கும். குடும்ப பொருளாதார நிலையை பொறுத்தவரை எதிர்பார்த்த வரவுகள் தாமதம் ஆனாலும் எப்படியாவது வந்து சேர்ந்துவிடும்