மேஷம்

லாபகரமான செயல்கள் நடைபெறும். விரும்பிய காரித்தை விரும்பியபடியே செய்து முடிப்பீங்க. குடும்பத்துல கலகலப்பான சூழ்நிலை உருவாகும். உத்யோகத்துல உயர்ந்த நிலையடைய நீங்க செய்யும் முயற்சி நல்லபலனைத் தரும். குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீங்க. பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். யோகமான வாரம். பொருளாதார நிலை உயரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து காரியத்தை முடித்து கொடுப்பர். புதிய பணியாளர்களை சேர்ப்பதில் ஆர்வம் வரும். இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும் நாள். மனசுல நெனைச்சதை மறுகணமே செய்து முடிப்பீங்க. ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீங்க. தொழில் வளர்ச்சி சந்தோஷம் தருமே. ஃபேமிலியோட சந்தோஷ டூர் போவீங்க.

ரிஷபம்

நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும் . மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்ப பிரச்சினைகள் அகலும். விலகி சென்றவர்கள் உரிமையோடு நெருங்கி வந்து உறவு கொண்டாடுவாங்க. போயிட்டுப் போறாங்கன்னு மன்னிச்சு விட்ருங்க. பிறரை விமர்சித்தால் பிரச்சினைகள் ஏற்படும் என்று நினைவு வெச்சுக்கிட்டு கேர்ஃபுல்லாப் பேசுங்க. உங்க ஸன்  அல்லது டாட்டருக்கு, வரன்கள் முடிவடைவதில் தாமதங்கள் உருவாகலாம். ஆனால் அது உங்களை  டென்ஷன் செய்யாது. மறதியால் அவதிகளுக்கு ஆட்பட நேரிடும். உடல் நலனில் கவனம் தேவைங்க. ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் வாரம். சந்திச்சவங்களால சந்தோஷம் கிடைக்கும். பிள்ளைங்க நலன் கருதி எடுத்த முயற்சி சக்ஸஸ் ஆகும். வாகனப் பழுதுகளை சரிசெய்து நிம்மதியடைவீங்க.

மிதுனம்

வழிபாட்டால் வளர்ச்சி காணுவீங்க. ஆரோக்கியம் சீராக ஆகாரத்துல கட்டுப்பாடு தேவைங்க. திட்டமிட்ட காரியமொன்றை மாற்றியமைப்பீங்க.  அது சக்ஸஸ் குடுக்கும். தொழில் ரீதியாக எடுத்த முடிவு ரொம்ப சரியானதுன்னு உணருவீங்க. நன்மைகள் நடைபெறும் வாரம்.  தனவரவு தாராளமா இருக்கும். உத்தியோகத்துல மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீங்க. ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக விளங்கி ஹெல்ப் செய்வாங்க. எதிரிகள் உதிரியாகும்படியான சம்பவங்கள் தானா நடக்கும். எடுத்த காரியத்தை ஈஸியாச்க செய்து முடிப்பீங்க. இனத்தார் பகைமாறி ஒற்றுமை உண்டாகி இதனால இரண்டு பக்கம் உள்ளவங்களுக்கும் நிம்மதியாத் தூக்கம் வரும். தேக ஆரோக்கியம் தெளிவு பெறும். பழைய கடன் பாக்கிகளை நாசூக்காப் பேசி எப்டியோ வாங்கிடுவீங்க. கொஞ்சம் அதிகமா உழைக்க வேண்டி வரும்.

கடகம்

ஆதாயம் தரும் குட் நியூஸ் வாரத்தின் ஆரம்பத்துலயிலேயே வந்து சேரும். பொதுவாழ்வில் புகழ்கூடும். இடமாற்றம், ஊர்மாற்றம் செய்யும் எண்ணத்தை இப்போதைக்கு போஸ்ட்போன் செய்ங்க. கொடுத்த வாக்கை அருமையாக் காப்பாத்தி நல்ல பேர் எடுப்பீங்க. ஒளிமயமான எதிர்கால வாழ்க்கைக்கு உறுதுணைபுரியும்படியான செயல்பாடுகளைச் செய்வீங்க. உயர்ந்த மனிதர்களோட ஒத்துழைப்பு உண்டு. தொழில் ரீதியாப் புதுப்புது ஒப்பந்தங்கள் வந்து சேரும். வீட்டுக்குத் தேவையாய பொருட்களை வாங்கி, வீட்ல உள்ளவங்களைச் சந்தோஷப்படுத்துவீங்க. சுபச்செலவுகள் அதிகரிக்கும். பயணங்கள் பலன் தரும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவாங்க. பெற்றோர்களின் ஆதரவு திருப்தி தரும். பூமி வாங்கும் யோகம் உண்டு. உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதல்கள் அகலும். வெளிநாட்டில் ஒர்க் பண்ண ஒருசிலருக்கு அழைப்பு வரும் என்பதால ஹாப்பி ஆயிடுவீங்க.

சிம்மம்

பொதுவாழ்வில் உள்ளவங்களுக்கு மக்கள் செல்வாக்கு இன்கிரீஸ் ஆகும். வியாபாரம், தொழில் செய்யறவங்க எதிர்பார்த்த இலக்கை அடைய முடியும். உத்யோகத்துல ஒங்களோட கை ஓங்கியிருக்கும். உங்களுக்குக் கீழ வேலை பார்க்கறவங்க மட்டுமில்லாம, ஒங்களோட மேலதிகாரிங்ககூட ஒங்களை மதிச்சுப் பாராட்டுவாங்க. நிறை….ய உழைப்பீங்க. ஆனாலும் உழைப்புக்கேத்த ஊதியம் வர்றதுக்குக் கொஞ்சகாலம் பொறுத்திருக்கத்தாங்க வேணும். எதை எடுத்தாலும் தடையும், தாமதமும்தான் இருக்கும். கொஞ்சம் பொறுமையா இருங்க. கூடிய சீக்கிரம் எல்லாம் வேகம் பிடிக்கும். இந்த ராசியில் உள்ள சிலருக்கு, ஏற்றமும், இறக்கமும் கலந்த வாழ்க்கை உருவாகும். ஒரு தொகை செலவழிந்த பின்னரே அடுத்த தொகை கரங்களில் புரளும். தொழில் மாற்றங்களும், இடமாற்றங்களும் கூட உருவாக சான்ஸ் இருக்குங்க.

கன்னி

தொழில் வளம் சிறப்பாக இருக்கும். குறுக்கீடு சக்திகள் அகலும். கொடுக்கல்-வாங்கல்கள் சீராகும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். வருமானம் உயர உதவக்கூடிய வேலை ஒண்ணுல ஈடுபடுவீங்க. திட்டமிடாது செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். உங்களோட திறமைக்குரிய அங்கீகாரமும் கிடைக்கும். மத்தவங்க பாராட்டுமளவிற்கு நல்ல காரியம் ஒண்ணைச் செய்வீங்க. பொருளாதார நிலை உயரும். புகழ்மிக்க ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வருவீங்க. காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவரும். கடமையைச் செவ்வனே செய்து பாராட்டுப் பெறுவீங்க. பொருளாதார நிலை திருப்தி தரும். புதிய முயற்சிகளிலும் உங்களுக்கு சக்ஸஸ் கிடைக்கும்.  கல வழிகளிலும் உங்களுக்கு நன்மை கிடைக்கும். தனித்தியங்கி வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள முன்வருவீங்க. முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கீடுகள் கிடைச்சு நிம்மதியாவீங்க.

துலாம்

சில நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறலாம். புதிய திருப்பங்கள் பலவும் காண்பீங்க. புகழ்மிக்கவங்க உங்களுக்கு பின்னணியாக இருந்து, செய்யும் தொழிலைச் சிறப்பா செய்ய ஹெல்ப் செய்வாங்க. வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். எஸ்பெஷலி ஒங்க குழந்தைகங்களோட வருங்கால நலன் கருதி… உத்தியோகத்தைப் பொறுத்தவரை பாதிப்பு ஏற்படாது. உங்களுக்கு இடையூறு செய்தவர்கள் விலகுவர். மேலதிகாரிகள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். அது உங்களை சந்தோஷக்கடலில் ஆழ்த்தும். இல்லத்துல நல்ல சம்பவங்கள் நடைபெறும். புதிய ஒப்பந்தங்கள் வந்து பொருளாதார நிலையை உயர்த்தும். குடும்ப உறுப்பினர்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்க ஆரம்பிச்சு, குடும்பத்தோட பொருளாதார நிலை உயர்றதுக்கு வழி செய்வாங்க. நிம்மதியும் சந்தோஷமும் குடும்பத்துல நிலவும்.

சந்திராஷ்டமம்: பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 18 வரை

சந்திராஷ்டம தினங்களில்  பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

விருச்சிகம்

பிள்ளைங்களோட திருமண வாய்ப்புகளைச் சிறப்பாக நடத்தி முடிப்பீங்க. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கூடுதலாக வந்து சேரும். தொழில், வியாபாரம் செய்யும் எண்ணம் வந்தால் அனுபவமிக்க பெரியோரையும் ஒங்களோட ஜோதிடரையும் கலந்தாலோசிங்க. இப்போ தகுந்த தசா புக்தி நடக்குதான்னு உறுதி செய்துக்குங்க. வாகனம் நல்லபடியா மெயின்டெயின் ஆகுதான்னு பார்த்துக்குங்க. உத்தியோகத்துல ஒங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. உங்களுக்கு இடையூறு செய்தவங்க வேலையைவிட்டு விலகுவாங்க. மேலதிகாரிங்ககிட்ட பாராட்டு வாங்குவீங்க. எல்லா வழிகளிலும் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். புதிய ஒப்பந்தங்கள் வந்து பொருளாதார நிலையை உயர்த்தும். குடும்ப உறுப்பினர்கள் ஒருத்தருக்கொருத்தர் ஒற்றுமையா இருப்பீங்க. பிள்ளைங்களோட திருமண வைபவங்களைச் சிறப்பா நடத்தி முடிப்பீங்க.

சந்திராஷ்டமம்: பிப்ரவரி 18 முதல் பிப்ரவரி 21 வரை

சந்திராஷ்டம தினங்களில்  பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

தனுசு

சில சுப விஷயங்கள்  ஃபைனலா முடிவடையும். பொருளாதாரத்துல நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அருளாளர்களின் அல்லது ஆன்மிக வாசிங்களோட ஆசியும், அனுபவஸ்தர்களோட ஆலோசனையும் ஒங்களுக்கு சப்போர்ட்டா இருக்கும். உத்தியோகத்துல உயர்வும், பொதுவாழ்க்கைல  உள்ளவங்களுக்குப் புதிய பொறுப்புகளும் கிடைக்கும். தாய்வழி ஆதரவு கிடைக்கும். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். உறவினர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். கடல் தாண்டிச் சென்று பணிபுரியணும்னு ஆசைப்பட்டவங்களுக்கு அந்த விஷ் திடீர்னு நிறைவேறும்படியான சான்ஸ் கெடைக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தடைகள் ஒவ்வொண்ணா விலகும். தெய்வ தரிசனங்கள் செய்வீங்க. நல்ல வாய்ப்புகளை  வரவழைச்சுப்பீங்க.

சந்திராஷ்டமம்: பிப்ரவரி 21 முதல் பிப்ரவரி 23 வரை

சந்திராஷ்டம தினங்களில்  பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

மகரம்

இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். வியாபாரத்தில் வேலை ஆட்களால் ஏற்பட்ட இடையூறுகள் அகலும். மண், பூமியால் லாபம் உண்டு. எதுவுமே கொஞ்சம் நிதானப்போக்குலதான் இருக்கும். நீங்க ரொம்பவே ஜாக்கிரதையா இருக்க வேண்டியது உங்க வார்த்தைகளைப் பத்திதாங்க. தொழிலில் கிளைத் தொழில் தொடங்கலாமா என்ற சிந்திப்பீங்க. உத்யோகத்துல விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு வெளியில் வந்து சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் ஏற்பட்டா தயவு செய்து கொஞ்சம் கட்டுப்படுத்திக்குங்கப்பா. வீடு கட்டுவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது, ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் கூட கவனம் செலுத்தும் நேரமிது. இல்லத்துல நல்ல சம்பவங்கள் நடைபெறும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். வியாபாரத்தில் வேலை ஆட்களால் ஏற்பட்ட இடையூறுகள் அகலும். மண், பூமியால் லாபம் உண்டு. எதையும் ஒரு முறைக்குப் பல முறை முயற்சி செய்துதான் முடிக்க முடியும்.

கும்பம்

ரொம்ப காலமா டச் விட்டுப்போயிருந்த நல்லவங்களைப் பார்ப்பீங்க. அவங்களோட ஆசி உங்களுக்கு சந்தோஷம் குடுக்கும். வியாபாரத்தில் வேலை ஆட்களால் ஏற்பட்ட இடையூறுகள் அகலும். மண், பூமியால் லாபம் உண்டு. பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சில ஈடுபடுவீங்க. உடன்பிறப்புகளால ஏற்பட்ட சின்னச் சின்ன சலசலப்புனால, மனசுல லேசான டென்ஷன் வந்தாலும் அதை மறக்க வைக்கும்படியான குட் நியூஸ் வரும். உத்தியோகத்துல உள்ளவங்க சிலருக்கு ஒரு சந்தோஷமான தகவல் வரும். குழந்தைங்க  ஒங்களை சந்தோஷப்படுத்துவாங்க. குடும்பத்துல போதுமான வருமானம் இருக்கும். ஸோ டென்ஷன்ஸ் ஏதும் இருக்காது. கடன் தொல்லைகள் ஏற்படாது. நீதிமன்ற வழக்குகள் தள்ளிப் போகலாம். கலைஞர்களுக்கு ரொம்ப நாளைக்குப் பிறகு வாய்ப்பு வந்து மனசும் பர்ஸும் நிரம்பும்.

மீனம்

துயரங்களில் இருந்து விடுதலை கிடைக்கப்போகிறது. பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான சந்தர்ப்பங்கள் கைகூடி வரும். மத்தவங்களுக்கு இரண்டு நிமிஷத்துல முடியற வேலைங்க ஒங்களைப் பொருத்த வரையில் இரண்டு நாள் இழுத்தடிக்கும். பொறுமை மட்டும்தாங்க இப்போதைக்குத் தேவை. இடையிடையே வரும் அச்சுறுத்தல்கள் அகல ஆன்மிகப் பெரியவர்களின் அறிவுரை கை கொடுக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் சீர்கேடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வேளை தவறாம சாப்பிடுங்க. தைரியம் குறைய அனுமதிக்காதீங்க. சகோதர சகோதரிங்க முன் எப்போதையும்விட உங்களோட அனுசரணையாவும் ஒற்றுமையாவும் இருப்பாங்க. கலகலப்பான வாரமா இருக்கும். ஜாலியா வெளியே சுத்துவீங்க. தேவையில்லாத விஷயங்களுக்காகக் கற்பனையா பயப்படுவீங்க. செலவு குறையும்.