சென்னை: சென்னை உள்பட சில மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், வார இறுதி நாட்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த தமிழகஅரசு மற்றும் சென்னை மாநகராட்சி ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் 2வது அலை கட்டுக்குள் வந்ததால், தமிழகஅரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. வாரஇறுதி நாட்கள் அனைத்துக்கும் விலக்கு அளித்துள்ளது. அதனால் திரையரங்குகள் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்டவையும் பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். ஆனால்,கோவில்கள் மட்டும் திறக்க இதுவரை அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த மூன்று நாட்களாக கொரோனா அதிகரித்துள்ளது. இது அதிகாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்களும் கொரோவால் பாதிக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையிலும் தொற்று பாதிப்பு அதிகரித்து உள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட மிக அதிகமாகும். தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வந்தாலும் ஒரு சில மக்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள அச்சம் கொள்கின்றனர். அதனால் தினந்தோறும் 200 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இது கொரோனா மூன்றாவது அலையாக இருக்குமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், சென்னை உள்பட தமிழ்நாட்டின் முக்கிய பகுதிகளில் மீண்டும் வார இறுதிநாள் ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசு முயற்சி செய்துவதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி சென்னையில் முக்கிய வணிக பகுதிகள், காசிமேடு மீன் மார்க்கெட், மெரினா கடற்கரை, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வார இறுதி நாட்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை வரவும், தேவைப்பட்டால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகறிது.