எந்த கிழமைகளில் எந்த கடவுளை வழிபட வேண்டும் ?
இந்த இந்த தினங்களில் இவர்களை வழிப்பட்டால், நன்மை உண்டாகும்
🔯திங்கட்கிழமை
திங்கட்கிழமை எனப்படும் சோமவாரம் சிவ பெருமானுக்கு உகந்த நாளாகும். திங்கட்கிழமைகளில் வரும் பிரதோஷங்களில் சிவனை வேண்டி பிரதோஷ விரதம் இருப்பது மிகுந்த நன்மையை தரும்.  சோமவாரம் விரதம் இருந்து , ஈசனுக்கு பால் , அரிசி மற்றும் சர்க்கரை படைப்பது மிகவும் சிறந்தது என ஆன்மிகப் பெரியவர்கள் கூறியுள்ளனர்.
🔯செவ்வாய்க் கிழமை
செவ்வாய்க் கிழமை என்றதும் நமக்கு முதலில் நினைவிற்கு வருவது துர்க்கை அம்மனும் , ராகு காலத்தில் ஏற்றப்படும் எலுமிச்சை விளக்கும் தான். அந்த அளவிற்கு செவ்வாய்கிழமை துர்க்கை வழிபாட்டிற்கு உகந்ததாக கருதப்படுகிறது. செவ்வாய்க் கிழமைகளில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி வந்தால் , இல்லத்தில் துன்பம் நீங்கி இன்பம் பெருகும். அன்று முருகனுக்கும் உகந்த நாள். அன்றைய தினம் முருக பெருமானை வணங்கி கந்தசஷ்டி கவசம் படித்துவந்தால் பொல்லாதவரை பொடிப்பொடியாக்கும்.
🔯புதன்கிழமை
புதன் கிழமை ஆனைமுகத்தானை வணங்க ஏற்ற நாளாகும். புதன்கிழமைகளில் விநாயகருக்கு விரதம் இருந்து வழிபட , எந்த ஒரு காரியமும் தடங்கல் இல்லாமல் நடக்கும்.
🔯வியாழன் கிழமை
வியாழன் கிழமைகளில் விஷ்ணு , தட்சணாமூர்த்தி மற்றும் லக்ஷ்மி தேவி ஆகிய கடவுளுக்கு விரதம் இருப்பது நன்மையைத் தரவல்லது. அன்று குபேரனுக்கும் சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது.
🔯வெள்ளிக்கிழமை
வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள். மேலும் செல்வத்தை வாரி வழங்குபவளான திருமகளை வணங்கவும் ஏற்ற நாளாகக் கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் அம்மனுக்கு விரதமிருந்து வழிபடுவது அவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் காக்கும்.
🔯சனிக்கிழமை
நவகிரகங்களில் அனைவரின் தலை எழுத்தையும் மாற்றவல்ல சனிபகவானுக்கு உகந்த நாள் சனிக்கிழமை. ஆஞ்சநேயர் , பெருமாள் , மற்றும் காளி தேவிக்கும் சனிக்கிழமை உகந்த நாளே. சனிக்கிழமை அன்று அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றினால் ஜாதக ரீதியாக ஒருவருக்கு ஏற்படும் சனி தோஷத்திற்கு நிவாரணம் கிடைக்கும்.
🔯ஞாயிற்றுக்கிழமை
நவகிரகங்களில் முதன்மையானவராகக் கருதப்படும் சூரிய பகவானுக்கு ஏற்ற நாள் ஞாயிற்றுக்கிழமை. ஞாயிற்றுக் கிழமைகளில் தவறாமல் சூரிய பகவானுக்கு விரதமிருந்து வழிபட்டால் , எதிரிகளின் தொல்லைகளில் இருந்து நம்மை காப்பாற்றுவதோடு , நம்முடைய வாழ்க்கையும் அந்த சூரியனைப் போன்று பிரகாசமாக இருக்கும்.