கொரோனா ஊரடங்கு திருமண அமைப்பாளர்களின் வியாபாரத்தை முற்றிலும் சிதைத்து விட்ட நிலையில் தற்போது தங்களின் வியாபாரத்தை மீண்டும் தொடங்க புதுவிதமான யோசனைகளுடன் களமிறங்கியுள்ளனர் இவர்கள்.
“ரெண்டு மாசமா எந்த கல்யாணமும் நடக்காத சூழலில் இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமாக விசாரணைகள் வர ஆரம்பிச்சருக்கு. அதனால இப்போ உள்ள நிலவரத்திற்கு ஏத்தா மாதிரி நாங்களும் எங்களோட ஸ்டைலை மாத்திக்கிட்டோம்” என்கிறார் இது போன்ற நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் செந்தில்குமார்.
இந்த பேக்கேஜ்கள் ரூ. 1.49 லட்சம் மற்றும் ரூ. 1.99 லட்சம் என்று இரண்டு விதங்களில் கிடைக்கின்றது. இதன்படி, ஈ-பத்திரிக்கை, சாப்பாடு, போட்டோகிராபி, வீடியோ, சானிட்டைசர், N95 மாஸ்க், தெர்மல் ஸ்கேனிங், நேரடி ஒளிபரப்பு, மற்றும் சமூக இடைவெளியுடனான இருக்கைகள் எல்லாம் அடக்கம்.
“50 பேருக்கு மேல அனுமதி இல்லைன்றதால லைவ் டெலிகாஸ்ட் அவசியமாகிடுச்சு. எங்க வெப்சைட் மூலமாக 4000 பேர் வரை நிகழ்ச்சியை பார்க்க முடியும். அவங்க விரும்பினா யூடியூபில் கூட அப்லோட் பண்ணி தரோம்” என்கிறார் இவர்.
இனிவரும் காலங்களில் திருமணம் மட்டுமல்லாமல் அனைத்து நிகழ்ச்சிகளுமே இது போல லைவ் டெலிகாஸ்ட்டுக்கு மாறிவிடும் என்றே தெரிகிறது.
– லட்சுமி பிரியா