இரு செய்திகளுக்காக ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட இணையதள நிறுவனர்..
கோவையைத் தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் , இணையதளம்,’’ simplicity’.
இந்த இணையதளம் இரண்டு செய்திகளைத் தனது தளத்தில் வெளியிட்டிருந்தது.
’’கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும், டாக்டர்களுக்கு சரியான உணவு கிடைக்கவில்லை’ –என்பது ஒரு செய்தி.
’’கோவையில் பொதுமக்களுக்கு அரசாங்கம் வழங்கும் பொருட்களை ரேஷன் கடை ஊழியர்களே கொள்ளையடிக்கிறார்கள்’- என்பது இன்னொரு செய்தி.
இணைய தளம் வெளியிட்ட அந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தாறுமாறாக வைரல் ஆனது.
இந்த செய்திகளை வெளியிட்ட இணையம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோவை மாநகராட்சி சார்பில் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த இணையதள நிறுவனர் ஆண்ட்ரூ சாம் ராஜபாண்டியன் மீது போலீசார் இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் அவரை கைது செய்து, அவினாசி துணை சிறைச்சாலையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
– ஏழுமலை வெங்கடேசன்