வானிலை ஆய்வு மைய அறிக்கையில் மூன்றாவது மொழியாக இந்தி சேர்க்கப்பட்டுள்ளதாக புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், தென்னினிந்திய மொழிகளில் முதல்முறையாக தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் சேர்த்து இந்தி மொழியிலும் வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அது கூறியுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் மௌஸம் (Mausam) இணையதளத்தின் சென்னை https://mausam.imd.gov.in/chennai/ பக்கத்தில் மட்டும் இதுபோன்று மூன்று மொழிகளில் தெரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.

ஆந்திராவில் தெலுங்கு மற்றும் ஆங்கிலத்திலும், கேரளாவில் ஆங்கிலத்திலும் வானிலை முன்னறிவிப்பு வெளியாகிறது.

சென்னை வானிலை ஆய்வு மைய ‘மௌஸம்’ பக்கத்தில் புதிதாக செய்யப்பட்டுள்ள இந்த மாற்றம் தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.