டெல்லி: ‘இந்தியா’ கூட்டணியில் திரிணமூல் காங்கிரஸ் இருந்தாலும், நாடாளுமன்றத்தில் எவ்வாறு செயல்படுவது என்பது நாங்கள் சொந்தமாக முடிவெடுத்து அதன்படியே செயல்படுவோம்’’ என்று நாடாளுமன்ற திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுதீப் பந்தோபாத்யாய தெரிவித்தாா். மேலும், மோடி 3வதுமுறையாக பதவி ஏற்றிருப்பது நேருவுக்கு ஈடாகாது என்றும் சாடினார்.
மக்களவை தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் 29 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் சாதனை படைத்துள்ளது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி. இந்த கட்சி இண்டியா கூட்டணியில் இருந்தாலும் மாநிலத்தில், காங்கிரஸ், பாஜகவுக்கு எதிராகவே செயலாற்றி வருகிறது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்காமலேயே போட்டியிட்டது. இந்த நிலையில், திரிணமூல் மக்களவைத் தலைவராக மூத்த தலைவர் சுதீப் பந்தோபாத்யாய மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.
அவர் செய்தியளார்களை சந்தித்தபோது, ந்தியா’ கூட்டணியில் திரிணமூல் காங்கிரஸ் இருந்தாலும், நாடாளுமன்றத்தில் எவ்வாறு செயல்படுவது என்பது நாங்கள் சொந்தமாக முடிவெடுத்து அதன்படியே செயல்படுவோம்’’ என்று கூறினார்.
பிரதமர் 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ளார். நாட்டின் முதல் மற்றும் முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவுக்கு அடுத்தபடியாக இப்போதைய பிரதமா் மோடி தொடா்ந்து மூன்றாவது முறையாக பிரதமா் பதவி ஏற்றுள்ளாா். எனினும், அப்போது பிரதமா் நேருவுக்கு இருந்த மக்கள் ஆதரவு, இப்போதைய பிரதமருக்கு இல்லை. 1957 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை விட 10 இடங்கள் குறைந்து 361 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றபோது, 1962 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக நேரு பிரதமராகப் பதவியேற்றார். ஆனால், இப்போது மோடிக்கு அந்த அளவுக்கு இடங்கள் கிடைக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். “மக்கள் அவருக்கு (பிரதமர் மோடி) ஆதரவாக சில கருத்துகளை வழங்கியுள்ளனர். ஆனால் அது அவருக்குப் பின்னால் தீர்ப்பு வழங்கிய நேரு ஜி போல் இல்லை,” என்றவர், “எங்கள் தலைவர் மம்தா பானர்ஜி நேற்று இந்த அரசாங்கம் நீண்ட காலம் நீடிக்காது என்று கூறியிருக்கிறார் என்றவர், நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் ஆக்கப்பூா்வமாக செயல்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
‘இந்தியா’ கூட்டணியில் திரிணமூல் காங்கிரஸ் இருந்தபோதிலும், நாடாளுமன்றத்தில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த முடிவுகளை நாங்கள் தனித்தே மேற்வோம் என்றவர், . கடந்த தோ்தலைவிட இந்தமுறை கூடுதல் தொகுதிகளில் வென்றுள்ள திரிணமூல் காங்கிரஸ் மிகவும் ஆக்கப்பூா்வமாக செயல்படும் என்றார்.
மக்களவைத் தோ்தலில் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 இடங்களில் 29 இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் வென்றுள்ளது. கடந்த தோ்தலில் 22 இடங்களில் மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. மக்களவையில் எதிா்க்கட்சிகள் வரிசையில் காங்கிரஸ், சமாஜவாதிக்கு அடுத்தபடியாக அதிக எம்.பி.க்களைக் கொண்ட கட்சியாகவும் திரிணமூல் காங்கிரஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது.