சென்னை: சூழும் ஆரிய சூழ்ச்சிகளை எல்லாம் சுக்குநூறாக உடைத்தெறிவோம்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்   தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நம் தாய் அமைப்பான நீதிக்கட்சி தலைதூக்கிய நாள் இன்று. நீதிக்கட்சியின் நீட்சியே நம் திராவிட மாடல் ஆட்சி எனத் தொடர்ந்து மெய்ப்பிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக  தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நம் உரிமைக்குரலின் உதயம்!

இந்த மண்ணின் மைந்தர்களுக்குக் கல்வி – வேலைவாய்ப்பு – அதிகாரத்தில் உரிய பங்கைப் பெற்றுத் தந்து, சமூகநீதியை நிலைநாட்டியே தீருவது என்ற  #NonBrahminManifesto-வைச் செயல்படுத்திக் காட்ட, நம் தாய் அமைப்பான நீதிக்கட்சி தலைதூக்கிய நாள் இன்று.

நீதிக்கட்சியின் நீட்சியே நம் திராவிட மாடல் ஆட்சி எனத் தொடர்ந்து மெய்ப்பிப்போம்!

சூழும் ஆரிய சூழ்ச்சிகளை எல்லாம் சுக்குநூறாக உடைத்தெறிவோம்!

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.