
பெங்களூர்: கர்நாடகத்தில் குதிரை பேரம் உச்சத்தில் இருக்கும் நிலையில், பா.ஜ.க.வை எந்த சூழலிலும் ஆதரிக்கப்போவதில்லை என்று ம.ஜ.த. கட்சியின் குமாரசாமி உறுதிபட கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிகுகும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப்பெரும் கட்சியாக வென்றுள்ள பாஜக, அடுத்தடுத்த இடங்களில் உள்ள காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க முயற்சி செய்துகொண்டிருக்கிறது.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 12 பேர், ம.ஜ.த. எம்.எல்.ஏக்கள் இருவரை காணவில்லை. இவர்களை பாஜக கடத்திச் சென்று பேரம் நடத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஜேடிஎஸ் கட்சியிடம் காங்கிரஸ், முதல்வர் பதவியை விட்டுக்கொடுப்பதாக பேசியிருக்கிறது. ஆகவே இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் பாஜகவும் ம.ஜ.த. கட்சியிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றது. குமாரசாமியிடம் பாஜக மூத்த தலைவர் பிரகாஷ் ஜாவடேகர் தூது சென்றார்.
இந்த நிலையில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று தனித்தனியாக நடைபெறுகிறது. இந்த கூட்டத்துக்கு வருகை தந்த ம.ஜ.த. கட்சி தலைவர் குமாரசாமியிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
[youtube-feed feed=1]