மெக்சிகோ: இந்தியாவிலிருந்து 8 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக மெக்சிகோ அறிவித்துள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலிருந்து 8 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்தியாவிலிருந்து 8,70,000 கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளது.

இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசிகள் அடுத்த மாத தொடக்கத்தில் மெக்சிகோவுக்கு வரும். ரஷியாவின் ஸ்புட்னிக் மற்றும் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிகளும் மெக்சிகோவிற்கு வருகிறது என்றார்.

மெக்சிகோ மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து இலங்கை, பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மா், செஷல்ஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.