கோவை: திமுக கூட்டணியில் மற்ற கட்சிகள் கேட்பது போல்  நாங்களும்  கூடுதல் தொகுதிகள் கேட்போம்  என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில தலைவர் முத்தரசன் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில தலைவர் முத்தரசன் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் நலச்சட்டம், தொழிலாளர் உரிமைகளுக்கு எதிராக உள்ளது. இந்த சட்டத் தொகுப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றார்.

இந்த சட்டத்தை மத்தியஅரசு வாபஸ் பெறாவிட்டால், டெல்லியில்,    விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போராடியது போல், தொழிலாளர் போராட்டமும் நடக்கும் என எச்சரித்தார்.

பின்னர், திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள் கேட்பீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறியவர், தி.மு.க. உடனான இந்திய கம்யூனிஸ்டு கூட்டணி கொள்கை அடிப்படையில் உருவானதாகும். அதனால் தான் கடந்த 10 ஆண்டுகளாக இந்த கூட்டணி தொடர்கிறது. . எங்கள் கூட்டணி தொகுதி உடன்பாடு அடிப்படையில் உருவானதல்ல என்று தெரிவித்தவர்,

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக  கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்கும்போது, நாங்கள் சும்மா இருக்க முடியுமா, நாங்களும் கூடுதல் தொகுதிகளை கேட்போம்என்றார்.

எத்தனை தொகுதிகள் கேட்பீர்கள் என்ற கேள்விக்கு,  எத்தனை என்பது பிறகு முடிவு செய்யப்படும் என்றார்.

எஸ்ஐஆர் குறித்த கேள்விக்கு பதில் கூறிய முத்தரசன்,   தமிழக தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தவே தேர்தல் கமிஷன் எஸ்.ஐ.ஆர். பணியை நடத்துகிறது. அதனால் தமிழகத்தில் முறையாக தேர்தல் நடத்தப்படுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.