
புதுடெல்லி: உலகக்கோப்பை அரையிறுதியில் வெற்றிபெறுவதற்கு இயன்றவரை போராடினோம். ஆனாலும், அது எங்களின் மோசமான நாட்களில் ஒன்றாக அமைந்துவிட்டது என்று உலகக்கோப்பை தோல்வி குறித்த கவலையைப் பகிர்ந்து கொண்டுள்ளார் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா.
கடந்த 2019 உலகக்கோப்பையில் இந்திய அணி தோற்று வெளியேறி, ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனையொட்டு கருத்து தெரிவித்த ஜடேஜா, “உலகக்கோப்பை அரையிறுதில் வெல்வதற்கு கடைசிவரை உறுதியுடன் போராடினோம். ஆனால், கடைசியில் தோல்விதான் கிடைத்தது. எங்களுடைய மோசமான நாட்களில் ஒன்றாக அது அமைந்துவிட்டது” என்றுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கெதிரான அப்போட்டியில், இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேறியது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டாம் மூடி கூறியதாவது, “லீக் போட்டிகளில் சிறப்பாக ஆடியதால், ஆஸ்திரேலிய அணியின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்பது பெரிய சவாலான ஒன்றாகும். ஆனால், அந்த எதிர்பார்ப்பே கடைசியில் நெருக்கடியாகிப் போனது” என்றுள்ளார்.