டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தலைநகர் டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டதுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் ஆதரவு தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

மோடி அரசின் மக்கள் விரோத வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியறுத்தி தலைநகர் டெல்லியில், 71வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. வரும் 6ந்தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிடப்போவதாகவும், சாலை மறியல் செய்ய உள்ளதாகவும் விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.

இந்தநிலையில், விவசாயிகள் டெல்லிக்குள் புகுவதை தடுக்கும் வகையில், காவல்துறையினல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாலைகளில் இரும்பு கம்பிகளைக் கொண்டு, ஆணிகளை நட்டியும், முள் கம்பி வளையங்களை உருவாக்கியும், நாட்டின் எல்லையில் அமைக்கப்படுவதுபோல தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த செயல் சர்வதேச அளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஹாலிவுட் நடிகை ரிஹானா விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக  குரல் கொடுத்தார். ஏன் இந்தியாவைத் தவிர உலகளவில் விவசாயிகளின் போராட்டம் குறித்து கேள்வியெழுப்பப்படவில்லை என்றும் கேட்டிருந்தார். மேலும் பல நாடுகளை சேர்ந்த சமூக ஆர்வலர்களும், சூற்றுச்சூழல் ஆர்வலர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் சர்வதேச சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,  ’’இந்தியாவில் போராடும் விவசாயிகள் போராட்டத்திற்கு நாங்கள் ஒற்றுமையுடன் இணைந்து நிற்கிறோம்’’ என்று அவர் குரல் கொடுத்திருக்கிறார்.

விவசாயிகள் போராட்டம் 71வது நாள்: ‘போர்’ சூழலை நினைவுகூறும் டெல்லி சாலையில் தடுப்புகள்….