சென்னை: தாம்பளத்தில் ஜால்ரா அடிக்கும் செங்கோட்டையன் நிலை எங்களுக்கும் வந்துவிடக்கூடாது என அதிமுகவில் இருந்து விலகி விஜய் கட்சியான தவெகவில் இணைந்துள்ள  செங்கோட்டையனை அதிமுக முன்னாள் அமைச்சர்  திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்தார்.

 தவெக மூன்றாமாண்டு தொடக்கவிழாவையொட்டி ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், ஈரோடு அமைப்புச் செயலாளருமான செங்கோட்டையன் கலந்துகொண்டு பேசினார். அப்போது,   முதன்முதலில் எம்.ஜி.ஆரை பார்த்து சினிமா படத்தைப்போல 100 நாட்கள்தான் இது ஓடும் என்றார்கள். ஆனால் அவர் உயிருள்ளவரை அவர்தான் அவர்தான் தமிழ்நாட்டின் எம்.ஜி.ஆர். அதற்கு பிறகு பொறுப்பேற்ற ஜெயலலிதா இருந்தவரை அந்த இயக்கத்தை யாராலும் அசைக்கமுடியவில்லை என்று கூறியதுடன்,

இன்று, நாளை தமிழ்நாட்டை ஆளப்போகிறேன். எதிர்கால தமிழ்நாட்டை உருவாக்கப் போகிறேன் என தமிழ்நாட்டின் நம்பிக்கையாக நிற்கக்கூடியவர் வெற்றிக் கழகத்தின் தலைவர் புரட்சித் தளபதி விஜய் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்” என்று கூறினார். செங்கோட்டையன் பேச்சு, அதிமுகவினரிடையே எரிச்சலை ஏற்படுத்தியது. .

இந்த நிலையில், நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்க வந்த அதிமுக பொருளாளரும், முன்னாள அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசனிடம் செய்தியாளர்கள், செங்கோட்டையன் பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர்.

இதறகு பதில் அளித்தவர்,   விஜய்யை புரட்சித்தளபதி என செங்கோட்டையன் அழைப்பது குறித்து  நான் கண்ணீர்தான் விடவேண்டும். எங்களுடன் இருந்த ஒரு பெரியமனிதர் இவ்வளவு கீழ்த்தரமாக போய்விட்டாரே என்று கண்ணீர்தான் விடவேண்டும் என்று கூறியவர்,  எல்லோருக்கும் ஒரு தகுதி இருக்கும். ஆனால், அந்த தகுதிகூட செங்கோட்டையனுக்கு இல்லால் போய்விட்டது, மாற்று கட்சிக்கு சென்றவர்கள்,  ஒரு சின்னதட்டில் ஜால்ரா அடிப்பார்கள். ஆனால்  அவர் (செங்கோட்டையன்) தாம்பளத்தில் அடிக்கிறார். அப்பொழுதும் அவரை நான்காவது, ஐந்தாவது இடத்தில்தான் உட்கார வைத்துள்ளனர். எங்களுக்கு அந்த நிலை வந்துவிடக்கூடாது என்றுதான் கண்ணீர் வடிக்கிறோம். அவரது நிலை தாழ்ந்து விட்டது”  என கடுமையாக விமர்சித்தார்,

[youtube-feed feed=1]