சென்னை:

பாலில் கலப்படம் குறித்து தமிழக பால்வள துறை அமைச்சரின் கருத்து பொதுவான ஒன்று என்றும் எங்கள் நிறுவனத்தில் தரமான பாலை தினமும் 13 லட்சம் லிட்டர் வினியோகம் செய்யப்பட்டு வருதாக திருமலா பால் நிறுவன பொதுமேலாளர் ஈஸ்வரபாபு தெரிவித்தள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,‘‘சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு தரமான பாலை மக்களுக்கு வழங்கி வருகிறோம். அரசு மேற்கொள்ளும் எவ்வித சோதனைக்கும் எங்கள் நிறுவனம் தயார். அமைச்சரின் கருத்து குறித்து பொதுமக்கள் தொலைபேசி வாயிலாக சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் பால் விறபனை சரிவு ஏற்படவில்லை’’ என்றார்.

இதுகுறித்து முதல்வரிடமிடம் முறையிடுவது எவ்வித முடிவும் எடுக்கவில்லை.
Hydrogen peroxide  என்ற ரசாயனம் பல ஆண்டுகளுக்கு முன்பு சில வட இந்திய தனியார் பால் நிறுவனங்கள், பால் கெடாமல் இருக்க பயன்படுத்தி வந்தன. ஆனால் தமிழகத்தில் அது போன்ற நடைமுறை இல்லை’’ என்று மறுத்தார்.