டெல்லி: சீனா விஷயத்தில் மத்தியஅரசு கடுமையான முடிவு எடுக்க வேண்டும், பிரதமர் மோடிக்கு, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தி உள்ளார்.
பாஜக தலைமைக்கு எதிராக அவ்வப்போது அதிரடி கருத்துக்களை தெரிவித்து வருபவர் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி. நாட்டின் பொருளாதா சரிவு, நிதி அமைச்சரின் நடவடிக்கைகள் குறித்து அவ்வபோது விமர்சித்து வருகிறார். மேலும் அரசின் நடவடிக்கைகளையும் விமர்சிக்க தயங்குவது இல்லை.
சமீபகாலமாக, காஷ்மீர் மாநிலம் லடாக் லே எல்லையில் சீனா அத்துமீறி வருகிறது. தற்போது மீண்டும் அத்துமீற முயற்சித்து, இந்திய ராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. லடாக்கில் இந்தியா-சீனா எல்லையில் இருந்து இந்தியாவின் 1000 சதுர கி.மீட்டர் பரப்பை சீனா ஆக்கிரமித்து வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது
இந்த நிலயில், அத்துமீறலில் ஈடுபட்டு வரும் சீனா குறித்து கடுமையான முடிவு எடுங்க என மத்திய அரசை சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,
இந்தியா குறித்து சீனா ஒரு முடிவு எடுத்திருப்பதை மத்திய அரசு உணரவில்லை என்பது வருத்த மளிக்கிறது. சீனா குறித்து நாம் ஒரு முடிவு எடுக்க வேண்டும். கடினமாக இருங்க, நான் மீண்டும் சொல்கிறேன் கடினமாக இருங்க, மேஜையில் (பேச்சுவார்த்தையில்) அமராதீங்க. கடந்த 5ஆண்டுகளில் ஜி ஜின்பிங்குடன் 18 முறை பேச்சுவார்த்தை நடந்த பிறகும், இந்திய தலைவர்கள் சீனர்களை அலட்சியம் கொள்ளக் கூடாது என வலியுறுத்தி உள்ளார்.