டெல்லி: இந்தியர்களாகிய நாம் நமது கிரிக்கெட் வீரர்களை நினைத்து பெருமைகொள்வோம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும, இந்தியா, ஆஸ்திரேலியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது வரை மூன்று போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் நீடிக்கிறது. எஞ்சிய 4வது போட்டி 15ஆம் தேதி முதல் பிரிஸ்பேனிலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இடையிடையே மழை காரணமாக ஆட்டத்தில் தடங்கல் ஏற்பட்டாலும், ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரான சுனில் கவாஸ்கர், ஆஸ்திரேலியாவில் விளையாடி வரும் இந்திய அணியினருக்கு பாராட்டு மழை பொழிந்துள்ளார்.
இந்தியர்களான நாம், நமது கிரிக்கெட் வீரர்களைப் பற்றி உண்மையிலேயே பெருமைப்படுவோம். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஆட்டத்தில், இந்த வீரர்கள் காண்பிக்கும் உறுதியும், ஆற்றலும் ஊக்கமளிக்கிறது என்று தெரிவித்துள்ள கவாஸ்கர, இந்த கோடையில் இந்திய அணி சாதித்ததை ஆஸ்திரேலியர்கள் நினைவில் கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் 4 டெஸ்ட் போட்டிகள் தொடரில் அஜிங்க்யா ரஹானே தலைமையிலான தரப்பினர் காட்டிய தீர்மானம், வலிமை மற்றும் உறுதி போன்றவை இந்திய அணிக்கு ஊக்கமளிப்பதாக 4-வது டெஸ்ட் போட்டியில் பார்டர்-கவாஸ்கர் தொடர் கைப்பற்றப்பட்ட நிலையில், ஸ்டாண்ட்-இன்-கேப்டன் அஜிங்க்யா ரஹானே தலைமையிலான காயம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நிலையிலும் அணி வீரர்களின் கடுமையாக உழைப்புக்கு, இந்தியர்களான நாம், நம் கிரிக்கெட் வீரர்களைப் பற்றி உண்மையிலேயே பெருமைப்படுவோம்.

இந்த கிரிக்கெட் அணியின் இந்த சுற்றுப்பயணம் இந்தியாவை உடல் ரீதியாக மட்டுமல்ல, மனரீதியாகவும் சோதித்துள்ளது என்று தெரிவித்துள்ள கவாஸ்கர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இருந்து, கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், உயிருக்கு பாதுகாப்ப சூழலில் ஆஸ்திரேலிய பயணம் மேற்கொண்டனர். ஒவ்வொரு முறையும் சோதனை நடத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டடு போன்ற கடுமையான நடவடிக்கைகளை பினப்ற்றி அங்கு வாழ்ந்து வருகின்றனர். “இந்த வீரர்கள் காண்பிக்கும் உறுதியும், ஆற்றலும் ஊக்கமளிக்கிறது. பெரும்பாலானவர்கள் வீட்டை விட்டு வெளியேறி, ஐந்து மாதங்களுக்கும் மேலாக தனித்திருந்து விளையாடி வருகின்றனர். இந்த ஆட்டத்தின்போலு, பல காயங்கள் உள்பட பல பாதிப்புகளுக்கு உள்ளானாலும், போட்டியை சிறப்பாக நடைபெற்று வருவருவதாகவும், ஆஸ்திரேலிய அணியை அடித்து நொறுக்கி வருகிறார்கள் என்று புகழாரம் சூட்டி உள்ளார்.
மேலும்,, “என்னையும் ஆலன் பார்டரையும் கவுரவிப்பதற்காக பெயரிடப்பட்ட ஒரு கோப்பை தொடரில், நமது அணி கேப்டன் தலைமையில் வீரர்கள் ஆடி வருவதை, ஆஸ்திரேலியர்கள் மதிக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். இந்த கோடையில் அணியின் வீரர்கள், அங்கு எதை அடைந்தார்கள் என்பதை நீங்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பீர்கள் “என்றும் தெரிவித்துள்ளார்.
1988ஆம் ஆண்டு முதல் பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி ஒரு முறை கூட தோல்வியடைந்ததில்லை. இதனால், இந்திய அணிக்குப் பின்னடைவு ஏற்படும் எனச் சிலர் கூறுகிறார்கள். ஆனால், அப்படி நடக்க வாய்ப்பில்லை என நம்புகிறேன். முதல் முறை என்ற சொல் அகராதியில் இருக்கிறது. அஜிங்கிய ரஹானே தலைமையிலான இந்திய அணி இதைச் சாதித்துக் காட்டும்” என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]