டெல்லி:
ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8ம் தேதி வரை நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அணியின் உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு விட்டதாக இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்து உள்ளார்.
கொரோனோ தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டி, எப்போது நடைபெறும் என கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் அமீரகத்தில் நடைபெறும் என தகவல் வெளியானது. இந்த நிலையில், தற்போது போட்டிகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கூறிய ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல், ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8ம் தேதி வரை நடைபெறும் இந்த அட்டவணையை அங்கீகரிப்பதற்காக ஐபிஎல் நிர்வாகிகள் பங்குபெறும் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறும் என்றார்.
மேலும், செப்டம்பர் 26ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என்றாலும், இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகப் போட்டிகளை முன்கூட்டியே நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா வீரர்கள் செப்டம்பர் 15 வரை இங்கிலாந்தில் ஒரு தொடரில் ஆட வேண்டியது உள்ளதால், அவர்களை நேரடியாக துபாய்க்கு பறக்க வைக்க வேண்டும். இது விவாதத்தை எற்படுத்தும் என்றாலும், இதுதொடர்பாக அடுத்த வாரம் நடைபெறும் ஆளும் சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
உத்தியோகபூர்வ அறிவிப்பு இந்தியன் பிரீமியர் லீக்கின் ஆளும் குழு கூட்டத்திற்குப் பிறகுதான் அறிவிக்கக்கூடும், ஆனால் ஐபில் 13 வது லீக்கின் விளையாட்டுத் திட்டங்களை தயாரிப்பதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) ஐபிஎல் உரிமையாளர்களுடன் இணைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், போட்டி நடைபெறும் அமீரகத்துக்கு , ஐபிஎல் அணிகளைத் தவிர, பிசிசிஐ-யிலிருந்து தளவாடங்கள் மற்றும் செயல்பாட்டுக் குழுக்களும் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய நாடுகளுக்குச் செல்லவுள்ளன, அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்றும் கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் அச்சுறுத்தல் இன்னும் முடிவடையாததால், நாட்டில் பல அணிகளை நடத்துவதற்கான நேரம் உகந்ததல்ல என்பதால், அக்டோபர்-நவம்பர் மாதங்களில் டி 20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியாவில் நடத்த முடியாது என்று ஐ.சி.சி சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ அனுமதி வழங்கி உள்ளது.

இந்தியாவில் கொரோனா தீவிரமாகி உள்ளதால், இங்கு போட்டிகளை நடத்துவது சாத்தியமில்லை என்பதால், ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகளை நடத்துவதாக கூறப்படுகிறது. மற்ற நாடுகளைப் போல் இல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுலா விதிமுறைகள் முற்றிலும் தளர்த்தப்பட்டு உள்ளன. அங்கு சுற்றுலா செல்பவர்கள் தனிமைப் படுத்தப்படுவதில்லை.
கொரோனா பரிசோதனை செய்யப்பட பின்பு, அந்த நபருக்கு கொரோனா இல்லை என்று தெரிய வந்தால், அவருக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இதனால், இந்தியாவில் இருந்து செல்லும் ஐபிஎல் குழுவினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் விதிமுறையில் இருந்து விலக்குப்பெற அதிக வாய்ப்புள்ளது.
மேலும்,மைதானங்களில் குறிப்பிட்ட சில ரசிகர்களுக்கு மட்டும் அனுமதி வழங்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
ஐபிஎல்13 மொத்தம் 60 போட்டிகளுடன் 44 நாட்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் கடந்த 2014ம் ஆண்டு நடந்ததை போலவே நடப்பு தொடரும் நடக்கும் என்று கூறப்படுகிறது.