டில்லி:

ஜனாதிபதி தேர்தலில் 21 எம்.பி.க்கள், 77 எம்.எல்.ஏக்களின் ஓட்டு செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 15வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 17ம் தேதி நடைபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் மீராகுமாரும் போட்டியிட்டனர்.

ஜனாதிபதி தேர்தலில் 4,896 எம்.பிக்கள், எம்எல்ஏ-க்கள் வாக்களித்தனர். நாடாளுமன்றத்தில் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

இதில் மொத்தம் 5 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 10,98,882 வாக்குகளில் ராம்நாத் கோவிந்த் 702044 வாக்குகளும், மீராகுமார் 367314 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

மொத்தம் பதிவான வாக்குகளில் ராம்நாத் கோவிந்த் 65.65 சதவீதமும், மீராகுமாரும் 3சதவீதமும் பெற்றுள்ளனர். 21 எம்.பிக்க்கள் 77 எம் எல்..ஏக்கள் வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது.