டெல்லி:
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்து உள்ளர்.
எங்கள் அதிகாரத்தைக் கொண்டு அரசாங்கத்தின் அதிகாரத்தை மாற்ற நாங்கள் திட்டமிடவில்லை’ என்று கூறிய தலைமை நீதிபதி, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் குறித்து மத்தியஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 13ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் கடந்த மாதம் (மார்ச்) 24ந்தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் தமிழ்நாடு, ஆந்திரா, கருநாடகம், கேரளா மற்றும் மராட்டியம் உள் ளிட்ட மாநிலங்களில் வசிக்கும் பிற மாநிலங்களை சேர்ந்த தொழி லாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மற்ற மாநில தொழிலாளர்கள், போக்குவரத்தின்றி, சொந்த ஊருக்கும் திரும்ப முடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர். பலர் தங்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் கடும் வெயிலில் பல கி.மீட்டர் தொலைவுக்கு நடந்தே சொந்த ஊருக்கு செல்கின்றனர்.
இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் வழக்கறிஞர்கள் இருவர் பொது நல மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுவில், ஊரடங்கு உத்தரவால் புலம் பெயரும் தொழி லாளர்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச்சில் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. கடந்த விசாரணையின்பேதாது, மத்தியஅரசு தாக்கல் செய்த பதில் மனுவில், நாடு முழுவதும் 4.14 கோடி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு மாநி லங்களில் உள்ளனர் என்றும் நாடு முழுவதும் முகாம்களில் தங்க வைக் கப்பட்டுள்ள ஏழைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள் ளிட்ட 22 லட்சத்து 88 ஆயிரம் பேருக்கு உணவு அளிக்கப்பட்டு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் (கள்) சார்பில் ஆஜரான வக்கீல் பிரசாந்த் பூஷண், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இந்த கட்டத்தில் ஊதியம் வழங்கப்படுவதற்காக நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும், இதனால் அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு வீட்டிலேயே திருப்பி அனுப்ப முடியும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த பெஞ்ச், பூஷனிடம் மத்திய அரசு சமர்ப்பித்த நிலை அறிக்கையை கொடுக்கும்படியும், இந்த விவகாரம் குறித்து விரிவான பதிலை மத்திய அரசு அடுத்த திங்கட்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
அப்போது குறுக்கிட்ட பிரசாந்த்பூஷன், “திங்கட்கிழமைக்குள், பலர் இறந்துவிடுவார்கள். அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட நபர்கள், தங்கள் குடும்பங்களுக்கு அனுப்புவதற்கு கொஞ்சம் பணம் கொடுத்து உதவ வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
ஆனால், அதை ஏற்க மறுத்த தலைமைநீதிபதி சி.ஜே.ஐ தலைமையிலான பெஞ்ச் இது தொடர்பாக எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க மறுப்பு தெரிவித்தது.
அரசின் அதிகாரத்தை எங்கள் அதிகாரத்தால் மாற்றுவதற்கு நாங்கள் திட்டமிடவில்லை என்று கருத்து தெரிவித்த தலைமைநீதிபதி நீதிபதி எஸ்.ஏ.போப்டே கூறினார். அரசாங்கத்தின் நிலை அறிக்கையை நீங்கள் காணாதபோது அரசாங்கம் எதையும் செய்யவில்லை என்று எப்படி சொல்ல முடியும்?” கேள்வி எழுப்பினார்.
அதைத்தொடர்ந்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.