ஐதராபாத்: இந்தியர்கள் என்பதற்காக, நாங்கள் பின்னடைவை சந்திக்கத் தேவையில்லை என்று உணர்ச்சிப்பட பேசியுள்ளார் பாரத் பயோடெக் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா.
மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தினுடைய கொரோனா தடுப்பு மருந்தின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இவ்வாறு பேசியுள்ளார் கிருஷ்ணா எல்லா.
அவர் கூறியுள்ளதாவது, “நான் அறிவியலை வாசிக்கிறேன். நான் அறிவியல்பூர்வமாக வாழ்கிறேன். எனது குடும்ப உறுப்பினர்கள் யாரும் அரசியலில் இல்லை. நான் மீடியாவில் ஆதிக்கம் செலுத்துபவனும் அல்ல. நான் மீடியாவிலிருந்து எப்போதும் விலகியே இருப்பவன்.
ஆய்வகப் பரிசோதனையில் அங்கீகாரம் பெறுதலானது, எங்களுக்கு மருந்துபோலி தேவையில்லை என்பதாகும். திறந்தவெளி அடையாளத்தில் நாங்கள் மக்களுக்கு தடுப்பு மருந்துகளை செலுத்திக்கொண்டிருக்கிறோம்.
இந்தியாவாலும் புதிய விஷயங்களை சாதிக்க முடியும். இது வெறுமனே காப்பியடிக்கும் நாடல்ல. இந்தியர்கள் என்பதற்காகவே நாம் பின்னடைவை சந்திக்க வேண்டிய தலைவிதி நமக்கல்ல. எங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டானது, எங்கள் விஞ்ஞானிகளை இழிவுப்படுத்துவதாகும்.
அதேசமயம், பிரிட்டனில் நடைபெறும் ஆய்வுகளை மட்டும் எதற்காக யாரும் கேள்வி கேட்பதில்லை? ஏனெனில், இந்திய ஆய்வுகளை மட்டும் எளிதாக விமர்சிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம்” என்றுள்ளார் எல்லா.