சென்னை ராயபுரம் அரசு காப்பக சிறுவர்களுக்கு கொரோனா பரவியது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு இன்று பதில் அளித்துள்ள தமிழகஅரசு, கொரோனா பரவியது எப்படி என்று தெரியவில்லை என்று கைவிரித்து உள்ளது.
சென்னை ராயபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் சுமார் 55 குழந்தைகள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு பணியாற்றி வந்த விடுதி காப்பாளருக்கு முதலில் கொரோனா தொற்று பரவியதாக கூறப்படுகிறது. அவர் சரியான முறையில் சிகிச்சை மேற்கொள்ளாததால், அங்கு தங்கியிருந்த குழந்தைகளுக்கு கொரோனா தொற்று மளமளவென பரவியது. இதுவரை சுமார் 35 பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து உச்சநீதி மன்றம் தானாகவே வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இது தொடர்பாக ப்லவேறு கேள்விகளை எழுப்பிய உச்சநீதி மன்றம், தமிழகஅரசு அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி இன்று வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போது, காப்பக குழந்தைகளுக்கு சாதாரண காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதியானது. நோயின் தாக்கத்தை வைத்து குழந்தைகள் பிரிக்கப்பட்டு பல மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தைகள் வந்துள்ளதால் கொரோனா எப்படி பரவியது என்பது தெரியவில்லை என தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா அறிக்கை தாக்கல் செய்துள்ளளார்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை ஜூலை 6ந்தி நடைபெறும் என உச்சநீதி மன்றம் தெரிவித்து உள்ளது.