துபாய்: நாம் ஊர்சுற்றுவதற்கோ அல்லது ஜாலிக்காகவோ அமீரகம் வரவில்லை. மாறாக, விளையாடுவதற்கே வந்துள்ளோம் என்று சக வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் விராத் கோலி.

ஐபிஎல் தொடருக்கான பாதுகாப்பு வளையம் என்பது அனைவராலும் மதிக்கப்பட வேண்டியதாகும் என்றும் கூறியுள்ளார் ஆர்சிபி  அணியின் கேப்டன் விராத் கோலி.

அவர் கூறியுள்ளதாவது, “ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காகவே அமீரகத்திற்கு வந்துள்ளோம். எனவே, இதற்காக வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்றுதல் அவசியம்.

பாதுகாப்பு வளையத்தை மீறக்கூடாது. ஜாலியாக இருப்பதற்கோ, ஊரைச் சுற்றிப் பார்ப்பதற்கோ நாம் இங்கு வரவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

நமக்கு வழங்கப்பட்ட சலுகைகளை மட்டும் பின்பற்றினால் போதும்; தேவையற்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது. 2 மாதங்களுக்கு முன்பாக ஐபிஎல் நடக்குமா? என்பதே தெரியாமல் இருந்தது. இப்போது சாத்தியமாகியிருக்கிறது. எனவே இதை நல்லமுறையில் சிறப்பாக நடத்திக் கொடுக்க வேண்டியது வீரர்களின் கடமையாகும்” என்றார் கோலி.

[youtube-feed feed=1]