சென்னை: கேப்டன் தோனி இல்லாத வெற்றிடத்தை நிரப்ப முடியாமல் போனதாலேயே, நாங்கள் மும்பைக்கு எதிரான போட்டியை இழந்தோம் எனக் கூறியுள்ளார் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளமிங்.

சென்னை அணி, 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியுடனான இரண்டாவது போட்டியில் தோற்றதையடுத்து இவ்வாறு கூறியுள்ளார் ஃபிளமிங்.

“கேப்டன் தோனி ஒரு சிறந்த வீரர் மட்டுமல்ல, சிறந்த கேப்டனும்கூட. அணியின் மிடில் ஆர்டரில் அவர் இருந்தால் நிலைமையே வேறாக இருக்கும். அணிக்கு இயல்பாகவே ஒரு வலு கிடைக்கும். ஆனால், அந்த வலு அன்றைய தினம் இல்லாமல் போனது.

தோனி விட்டுச்சென்ற வெற்றிடத்தை நாங்கள் நிரப்ப முயற்சித்தோம். ஆனால், அந்த வெற்றிடம் மிகப்பெரியது என்பதால் எளிதாக நிரப்ப முடியவில்லை.

ஒரு அணியின் மிகச்சிறந்த வீரர் ஒருவர், திடீரென ஒரு ஆட்டத்தில் பங்‍கேற்காமல் போகும்போது, அதன் பாதிப்பு எப்படி இருக்கும்? என்பதை தனியாக சொல்லத் தேவையில்லை” என்றுள்ளார்.

காயச்சல் காரணமாக அந்தப் போட்டியில் மகேந்திர சிங் தோனி விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.