சென்னை:

நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவின் போது வலது கை விரலில் மை வைக்கப்பட்டது சர்ச்சையாக உருவெடுத்துள்ள நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி,  234 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் நிச்சயமாக எதிர்கொள்வேன், அரசியல் ஆர்வத்துடன் உள்ள ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் என்று தெரிவித்து உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்னும் தேர்தலை எதிர்கொள்ள பயந்து வருகிறார். தனது அரசியல்  ஆன்மிக அரசியல் என்று கூறியவர் பின்னர், தனது ரசிகர் மன்றங்கள் மக்கள் மன்றங்களாக மாற்றி, சமூக நலப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

ஆனால், இதுவரை நடைபெற்ற எந்தவொரு தேர்தலில் பங்குகொள்ள மறுத்து வருகிறார். ஆனால், தொடர்ந்து படங்களில் மட்டும் நடித்து கல்லாகட்டி வருகிறார். இதன் காரணமாக அவர் அரசியல் வருவது சந்தேகம் என்றும், தனது படங்களை ஓட வைக்கவே ரசிகர்களை அவ்வப்போது கூட்டி, அரசியல் குறித்து கேள்வி எழுப்பி தனது படத்தை வெற்றிப்படமாக்கி வருகிறார்… அவரது அரசியல் கட்சி என்பதெல்லாம் ஹம்பக் என்று மக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், இன்று  சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த  ரஜினி,
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என்றார்.

தேர்தல் ஆணையம் கடந்த முறையைவிட இந்த முறை சிறப்பாக பணியாற்றியுள்ளது என்றவர், . தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் வேலை என்றும் தெரிவித்தார்.

அப்போது செய்திளார்கள் ஒருவர், அடுத்த ஓட்டு ரஜினிக்குதான் என்ற ஹாஸ்டேக் டிரெண்டிங் ஆனது குறித்து கேள்வி  எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ரஜினி, நான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வம் புரிகிறது. அவர்களை ஏமாற்ற மாட்டேன், அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம்  எனக் கூறினார்.

, பிரதமராக மீண்டும் மோடி வருவாரா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு,  மே 23ஆம் தேதி தெரிந்துவிடும் என பதிலளித்தார்.