க்ரா

சென்ற நூற்றாண்டு இயற்றப்பட்ட சட்டங்கள் மூலம் இப்போதைய நூற்றாண்டைச் சீரமைப்பு  செய்ய முடியாது என பிரதமர் மோடி கூறி உள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் இன்று ஆக்ரோ மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது.   பிரதமர் மோடி காணொலி மூலம் இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.   இந்த ரயில் திட்டம் இரு வழி பாதிகளை கொண்டதாகும்.  இதன் மூலம் தாஜ்மகால், ஆக்ரா கோட்டை,ல் சிக்கந்தரா ரயில் நிலையம் ஆகியவை இணைக்கப்பட உள்ளது.   சுமார் ரூ.8379.62 கோடியில் உருவாகும் இந்த திட்டம் 5 ஆண்டுகளில் நிறைவடைய உள்ளது.

இந்நிகழ்வில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றி உள்ளார்.  மோடி தனது உரையில், “தன்னுடைய மெட்ரோ ரயில் நெட்வொர்க்கை மட்டும் இந்தியா விரிவுபடுத்தவில்லை. மாறாக தன்னுடைய சொந்த மெட்ரோ பெட்டிகள் கட்டுமானத்தையும், சிக்னல் முறையையும் மேக் இன் இந்தியா திட்டத்தில் விரிவுபடுத்தியுள்ளது. எனவே மெட்ரோ நெட்வொர்க்கில் தற்சார்பு இந்தியா வந்துள்ளது

சீர்திருத்தங்கள் தேசத்தின் வளர்ச்சிக்கு  அவசியம் ஆகும். சென்ற நூற்றாண்டில் இயற்றப்பட்ட சட்டங்களை வைத்துக்கொண்டு வரும் நூற்றாண்டை இந்தியா சீரமைக்க முடியாது.  எனவே சில புதிய வசதிகள்,செயல்முறைகள், சீர்திருத்தங்கள் அவசியமானவை.   சென்ற நூற்றாண்டில் வேண்டுமானால் பழைய சட்டங்கள் பயன் அளித்திருக்கும்.  அடுத்த நூற்றாண்டில் இந்த சட்டங்கள் சுமையாக மாறிவிடும்.” எனத் தெரிவித்துள்ளார்.