திருவள்ளுர்: 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில்,  ஒரு கை பார்த்து விடலாம் என திருவள்ளூர் அரசு விழாவில் கலந்துகொண்டு மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைத்த  முதல்வர் ஸ்டாலின் சவால் விடுத்தார்.

நான் அழுது புலம்புபவனும் அல்ல! யார் காலில் ஊர்ந்து போய் விழுபவனும் அல்ல என அதிமுக பாஜக கூட்டணி குறித்து கடுமையாக விமர்சித்ததுடன், அமித் ஷா அல்ல எந்த ஷா வந்தாலும் எங்களை ஆள முடியாது என்றும் காட்டமாக கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 2,02,531 பயனாளிகளுக்கு ரூ.357.43 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின்வழங்கினார். ரூ.418.15 கோடி மதிப்பீட்டில் 6,760 முடிவுற்ற பணிகளையும் திறந்து வைத்தார். ரூ.390.74 கோடி மதிப்பீட்டில் 7,369 புதிய திட்டப் பணிகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 63,124 பேருக்கு பட்டா வழங்கப்படுகின்றது. இந்த அளவுக்கு அதிகப்படியான பட்டாக்கள் வழங்கப்படுவது இந்த நிகழ்ச்சியில்தான் என பொன்னேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.

இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

1) “கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் தண்டலம் – கசவநல்லத்தூர் சாலையில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.20.37 கோடியில் உயர்மட்டப் பாலம் அமைக்கப்படும்.

2) திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம் மணவூர் – இலட்சுமி விலாசபுரம் சாலையில் கொசஸ்தலையாறு ஆற்றின் குறுக்கே ரூ.23.47 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.

3) திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், காக்களூர் ஊராட்சியில் தாமரைக்குளம் மேம்படுத்தும் பணிகள் ரூ.2.27 கோடியில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும்.

4) பழவேற்காடு பகுதியில் சூழலியல் சுற்றுலா வசதிகள் ஏற்படுத்தப்படும்; அங்குள்ள வைரவன்குப்பம் மீனவ கிராமத்தில் வலை பின்னும் கூடம் அமைக்கப்படும்.

5) திருமழிசை – ஊத்துக்கோட்டை சாலை ரூ.51 கோடியில் அகலப்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

பின்ன்ர அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின்,  “சென்னை சுற்றுவட்டாரங்களில் தொழில்வளாகங்களை உருவாக்கியது கலைஞர் கருணாநிதி. கண்ணாடி முதல் கார் வரை அனைத்து தொழில்களும் அவரது ஆட்சியில் தொடங்கப்பட்டன. கடந்த 4 ஆண்டுகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

“ஆட்சி மீது எந்த குறையும் சொல்ல முடியாததால் அவதூறு பரப்பி வருகின்றனர் எதிர்க்கட்சிகள் பொறுப்பாக செயல்படாமல் எதிரி கட்சிகள் போல் செயல்படுகின்றன தமிழ்நாட்டை அடகு வைக்க வேண்டும் என்பதே சந்தர்ப்பவாதிகளின் ஒரே நோக்கம்” என்று  குற்றம் சாட்டியவர்,  தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், எதிரிக்கட்சிகளாக செயல்படுகிறார்கள்.   தமிழகத்தை அடகுவைப்பது தான் சந்தர்ப்பவாதிகளின் ஒரே எண்ணம்.  இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்துதான் தமிழ்நாடு போராடுகிறது என்று கூறியவர்,

 மாநில உரிமைகளுக்கான அகில இந்திய முகமாக திமுக உள்ளது; இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் சேர்த்துதான் போராடுகிறது. அமித்ஷா நமது கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் திசைதிருப்புவதற்காக ஏதோ பேசிவிட்டு சென்றிருக்கிறார்” என்றவர்,    நீட் தேர்வில் இருந்து விலக்கு தருவோம், இந்தியை திணிக்க மாட்டோம் என உறுதி தரமுடியுமா?  என எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி எழுப்பினார்.

தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டது என அமித்ஷாவால் உறுதி அளிக்க முடியுமா?   தமிழ்நாட்டிற்கு எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி தரப்பட்டது என பட்டியல் போட முடியுமா?   எந்த மசோதா கொண்டுவந்தாலும் திசை திருப்பல் எனக்கூறும் அமித்ஷா நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறட்டும்.

“மத்திய அரசுக்கு தமிழ்நாடு எப்போதுமே Out of Control தான்; உங்கள் பரிவாரங்கள் அனைத்தையும் அழைத்து வாருங்கள்; ஒரு கை பார்த்துவிடலாம்  மற்ற மாநிலங்களில் செய்வதுபோல் தமிழ்நாட்டில் உங்கள் வேலையை காட்ட முடியாது; டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றும் அடிபணியாது  என்றவர்,  “அமித் ஷா அல்ல எந்த ஷா வந்தாலும் எங்களை ஆள முடியாது; இது தமிழ்நாடு 2026 தேர்தலிலும் திராவிட மாடல் ஆட்சி; உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்; டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றுமே அடிபணியாது” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளர். 

தமிழ்நாட்டின் உரிமையை கேட்டால் அழுகிறோம் என்கிறார் பிரதமர், அவர் முதல்வரக இருந்த போது நிதி கேட்கவில்லையா?   தி.மு.க.வின் பவர் என்ன என்று இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் தெரிந்துவிட்டது.

கவர்னர்கள் மூலம் தனி ராஜாங்கம் செய்கிறார்கள் என குஜராத் முதல்வராக இருந்தபோது மோடி கூறினார்.   நாங்கள் மத்திய அரசிடம் கேட்பது பிச்சையல்ல, உரிமை. நான் கையேந்தி நிற்பவனும் இல்லை, ஊர்ந்து செல்பவனும் இல்லை.  நான் அழுது புலம்பவும் மாட்டேன், ஊர்ந்து செல்வும் மாட்டேன். *

ஒரு குழந்தைக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று தாய்க்கு தெரியும், அதை டெல்லி தீர்மானிக்கக் கூடாது.   எப்படியெல்லாம் குடைச்சல் கொடுக்க முடியுமோ அதை எல்லாம் செய்கிறார்கள். * குடைச்சல் கொடுக்காமல் நியாயமாக செயல்பட்டால் எங்களால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்.

டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றுமே அடிபணியாது.   அ.தி.மு.க.வை மிரட்டி பா.ஜ.க. கூட்டணி வைத்துள்ளது. * தன்மானமும், தமிழ்மானமும் இல்லாதவர்களுடன் கூட்டணி வைத்து ஜெயிக்க முடியாது.

ஒரு கை பார்த்து விடலாம், படைகளை திரட்டிக்கொண்டு வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்தார்.