
புதுடெல்லி: தோனியும் நானும், ஒரே அறையில் தரையில் படுத்துக்கொண்டு, அவரின் நீண்ட முடி குறித்து பேசிக்கொண்டிருந்திருக்கிறோம் என்றுள்ளார் இந்தியாவின் முன்னாள் துவக்க வீரர் & தற்போதைய மக்களவை உறுப்பினர் கவுதம் கம்பீர்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன், ஒரே அறையைப் பகிர்ந்துகொண்ட அனுபவத்தை அவர் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “நாங்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக ஒரே அறையைப் பகிர்ந்து கொண்டிருந்திருக்கிறோம். அப்போது அவரின் நீண்ட கூந்தல் குறித்து பேச்சு வரும். எங்களின் அறை மிகவும் சிறியது.
எனவே, என்ன செய்வதென யோசித்து, மெத்தைகளை வெளியே போட்டுவிட்டு, தரையில் படுத்து உறங்கினோம். அந்த தருணங்கள் அழகானவை. ஒரு மனிதருடன் ஒரே அறையைப் பகிரும்போது, அவரைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள முடியும்.
அவர், சர்வதேச கிரிக்கெட்டில் ஆடத் தொடங்கிய புதிதில், அவருடன் சேர்ந்து, கென்யா, ஜிம்பாப்வே போன்ற நாடுகளுக்குப் பயணித்துள்ளோம்” என்றுள்ளார் கவுதம் கம்பீர்.