ஜம்மு:
காஷ்மீர் மண்ணில் யாராவது கொல்லப்படும் போது, ஒவ்வொரு முறையும் வருந்துகிறோம் என பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானி கூறியுள்ளார்.
சிஆர்பிஎஃப் வீரர்கள் 39 பேர் உயிர் தியாகம் செய்த பின், பிரிவினைவாத தலைவர்கள் சையது அலி கிலானி மிர்வாய்ஸ் உமர் பரூக், யாஷின் மாலிக் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், காஷ்மீர் மண்ணில் நிகழும் ஒவ்வொரு படுகொலைக்காக மக்களும் தலைவர்களும் வருந்துகிறோம்.
காஷ்மீர் விவகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதில் ஏற்படும் தாமதம் காஷ்மீரை அழிவை நோக்கி கொண்டு சென்று கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து இயங்கும் ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் கோழைத்தனமான தாக்குதலில் நமது சிஆர்பிஎஃப் வீரர்கள் 39 பேர் இறந்தது குறித்து குறிப்பிடாமல் இந்த அறிக்கையை பிரிவினைவாத தலைவர்கள் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.