தூக்கை எதிர்நோக்கி காத்திருக்கும்  ‘நிர்பயா’  குற்றவாளிகள்

டில்லி,

நாடு முழுவரும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய டில்லி நிர்பயா பாலியல் பலாத்கார கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது.

இதை நிர்பயாவின் பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர். இப்போதான் நிம்மதி கிடைததுள்ளது என்று என்று கூறினர்.

கடந்த 2012ம் ஆண்டு தலைநகர் டெல்லியில் நிர்பயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மருத்துவ மாணவி 6பேர்  கொண்ட கும்பலால் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது, அந்த கும்பலால் கொடூரமாக தாக்குதலுக்கும் ஆளானார்.

அதைத்தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் மரணத்தை தழுவினார்.

இந்த கொடூர சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

அதைத்தொடர்ந்து குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளி சிறைச்சாலையில் தற்கொலை செய்துகொண்டார். ஒருவர் 18வயதுக்கு குறைவானவர் என்பதால் 3 ஆண்டு தண்டனை பெற்று விடுதலையானார்.

மீதமுள்ள 4 குற்றவாகிளுக்கும் ஏற்கனவே டில்லி ஐகோர்ட்டு விதித்த தூக்கு தண்டனையை தற்போது உச்சநீதி மன்றமும் உறுதி செய்துள்ளது. அதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரும் விரைவில் தூக்கிலப்படுவார்கள் என தெரிகிறது.

நிர்பயாவின் பெற்றோர்

இந்நிலையில், இன்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கேட்ட நிர்பயாவின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

தீர்ப்பு குறித்து அவர்கள் கூறியதாவது,

இந்த தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது என்றும் நீதி வென்றுள்ளது. இப்பதான் எங்களுக்கு நிம்ம சுப்ரீம் கோர்ட்டின்  இந்த தீர்ப்பு நாட்டுக்கு வலிமையான செய்தியை அனுப்பியுள்ளது என்று கூறினார்.

நிர்பயா தந்தை பத்ரி சிங், எனது குடும்பத்திற்கு கிடைத்த வெற்றி என்று கூறினார்.