சென்னை: கன்னியாகுமரி தொகுதி எம்.பி வசந்தகுமார் மறைவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பியான வசந்தகுமார் இன்று இரவு சுமார் 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு காங்கிரஸ் கட்சியினர் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வசந்தகுமார் மறைவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை இரங்கல் தெரிவித்து உள்ளது.
வசந்தகுமார் எம்.பி. மறைவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel