திருவனந்தபுரம்: கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 64.71% சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாகவும், சாலக்கரா சட்டமன்ற தொகுதியில் 74.54%. வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
அதுபோல ஜார்கண்ட மாநில முதல்கட்ட தேர்தலில், 66.48% வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்டு சட்டமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு மற்றும் நாடு முழுவதும் 43 தொகுதிகளில் இடைத்தேர்தல் வாங்குப்பதிவும் நேற்று (நவம்பர் 13ந்தேதி) விறுவிறுப்பாக நடைபெற்றது. ராஜஸ்தானில் 7, மேற்கு வங்கத்தில் 6, அஸ்ஸாமில் 5, பிகாரில் 4, கர்நாடகத்தில் 3, மத்திய பிரதேசத்தில் 2, சத்தீஸ்கர், குஜராத், மேகாலயா, கேரளம் தலா 1 பேரவைத் தொகுதியில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இதில் முக்கியமாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடும் கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி வாக்குப்பதிவு நாடு முழுவதும் உள்ள மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நேற்று காலை 7மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6மணி அளவில் முடிவடைந்தது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஜனநாயகக் கடமையாற்றினர்.
வயநாடு தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளா் பிரியங்கா காந்தியை எதிர்த்து, மாநிலத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி சாா்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்யன் மொகேரி, பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் உள்பட 16 வேட்பாளா்களின் வெற்றி நிலவரத்தை இந்தத் தொகுதியிலுள்ள மொத்தமுள்ள சுமாா் 14.71 லட்சம் வாக்காளர்கள் தங்களது வாக்கனை செலுத்தினார்.
இந்த நிலையில், வயநாட்டில் 64.71% சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாகவும்,சாலக்கரா சட்டமன்ற இடைத்தேர்தலில் 74,54 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் வெளியிட்டப்பட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, வயநாட்டில் 72.92 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது வாக்குப்பதிவு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.