துரை

துரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் நடைபெற உள்ள கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவுக்காக வைகை அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட உள்ளது.

கடந்த 18ஆம் தேதி மதுரை சித்திரைத் திருவிழா தொடங்கி கோலாகலமாக  நடைபெற்று வருகிறது.   முந்தாநாள் இரவு மீனாட்சி அம்மன்  பட்டாபிஷேக விழா சிறப்பாக நடந்தது.  நேற்று காலை சாமியும் அம்பாளும் மாசி வீதிகளில் திரு உலா வந்தனர்.   இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் ஆகும்.

நடைபெற உள்ள கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவுக்காக  வைகை அணையில் இருந்து நீர் திறந்து விடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   அதை ஒட்டி  முதல்வர் வைகை அணையிலிருந்து நீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளார்.   விரைவில் வைகை அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட உள்ளது.