மதுரை:
வைகை அணையில் இருந்து இன்று உபரி நீர் திறக்கப்பட உள்ளது.

வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடியாகும். இந்நிலையில், அணையின் தண்ணீர் அளவு 70 அடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, அணை இன்று திறக்கப்பட்டு அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட உள்ளது.
உபரி நீர் திறக்கப்படுவதை அடுத்து, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுறம் மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel