சென்னை: பெங்களூரு – பாட்னா இடையே ஓடும் சங்கமித்ரா விரைவு ரயிலில் உள்ள முதல் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில், நீரூற்றிலிருந்து வெளிவருவதைப் போன்று தண்ணீர் கொட்டியது.
இந்த சம்பவம் ரயில் பயணிகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதோடு, பீதியையும் ஏற்படுத்தியது.
பொதுவாக, இந்திய ரயில் சேவைகளில் பல குறைபாடுகள் ஏற்படுவது இயற்கையானதுதான் என்று சொல்லும் அளவிற்கு நாம் நமது மனப் பக்குவத்தை வளர்த்துக் கொண்டோம். செத்த எலி நாற்றம் உள்ளிட்ட பலவித அசெளகரியங்கள் ரயில் பயணங்களில் ஏற்படுவதுண்டு.
ஆனால், முதல் வகுப்பு குளிர்சாதன வசதிகொண்ட ஒரு பெட்டியில, குளிர்சாதன இயந்திரத்திலிருந்து தண்ணீர் அருவியைப் போன்று பொலபொலவென கொட்டும் விசித்திர சம்பவம் பெங்களூரு – பாட்னா இடையே ஓடும் சங்கமித்ரா ரயிலில் நடந்துள்ளது. இந்திய ரயில் சேவையில் இதுவும் ஒரு மைல் கல்தான் என்று சிலர் கிண்டலாக தெரிவிக்கிறார்கள்.