நடப்பாண்டில் 5வது முறையாக பில்லூர் அணை நிரம்ப உள்ளதால், பவானி ஆற்றங்கரையோ மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணை 5வது முறையாக நடப்பாண்டில் நிரம்பியுள்ளது. அணையில் இருந்து 30,000 கன அடி நீர் திறக்கப்படுவதால், பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மொத்த நீர்தேக்க உயரமான 100 அடியில் 98 அடிக்கு நீர் நிரம்பியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக ஏற்கனவே மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது பவானி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
[youtube-feed feed=1]