அகமதாபாத்:

சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை உள்ளே மழை நீர் ஒழுகி, பார்வையாளர் பகுதியில் தேங்கியது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.


குஜராத்தில் தற்போது மழை பெய்து வருகிறது. சமீபத்தில் அமைக்கப்பட்ட மிக பிரம்மாண்ட சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில், பட்டேல் சிலைக்குள் மழை ஒழுகி, பார்வையாளர் பகுதியில் தேங்கியுள்ள காட்சியை சுற்றுலாப் பயணி ஒருவர் தன் மொபைலில் படம் பிடித்தார்.

இது குறித்து சிலையின் சிஇஓ ஐ.கே.பட்டேல் விரைந்து வந்து, அந்த இடத்தைப் பார்வையிட்டார்.

சிலையில் கசிவு இருப்பதாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்க அவர் மறுத்துவிட்டார்.

எனினும், மழைக் காலத்தில் சுற்றுலா பயணிகள் ரசித்துப் பார்க்கும் வகையில், சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.