மேட்டூர்
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 6400 கன அடியில் இருந்து 8600 கன அடியாக அதிகரித்துள்ளது.
இந்த வருடம் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மிகக் கனமழை பெய்தது. இதனால் மேட்டூர் அணைக்குக் காவிரி நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையை அடைந்ததால் உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காவிரி நீர் மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 6400 கன அடி வந்து கொண்டு இருந்தது. தற்போது அது வினாடிக்கு 8600 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 8000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதைத் தவிரக் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கும் விநாடிக்கு 600 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இவ்வாறு தற்போதைய நீர் வரத்தான வினாடிக்கு 8600 கன அடி நீரும் திறக்கப்படுவதால் மேட்டூர் அணை நீர் மட்டம் மேலும் உயராது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.