வாஷிங்டன்:
கடந்த வாரம் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணை சோதனையை வட கொரியா வெற்றி கரமாக நடத்தி முடித்துள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில்,‘‘ வட கொரியா மிக பெரிய பிரச்னையாக உள்ளது. அதனால் அந்த நாட்டுடன் வலுவான ஒப்பந்தத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
இந்நிலையில் வட கொரியாவில் தற்போதுள்ள மூத்த அதிகாரிகளை அழைத்து வந்து அமெரிக்காவின் முந்தைய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா ஏற்பாடு செய்து வருகிறது என அங்கிருந்து வெளியாகும் வாஷிங் போஸ்ட் செய்தி வெளியிட் டுள்ளது.
சுமார் 5 ஆண்டுகள் கழித்து இது போன்றதொரு பேச்சுவார்த்தை நடத்த முதன்முறையாக அமெரிக்கா ஏற்படு செய்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க அதிபர் டிரம்புடன் வடகொரியா அதிபர் பேச்சு வார்த்தை நடத்தவும், தொடர்புகள் வைத்து க்கொள்ள விரும்புகிறாரா என்பதை தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் இந்த பேச்சுவார்த்தை இருக்கும் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பேச்சுவார்த்தைக்கான திட்டம் தயாரிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. எந்தெந்த முன்னாள் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வார்கள் என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை என்றும் செய்தகள் வெளியாகியுள்ளது. ஆனால், வட கொரியாவை சேர்ந்த அதிகாரிகள் யாருக்கும் இது வரை எவ்வித விசாவும் வழங்கப்படவில்லை என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏற்கனவே நடந்த ‘டிராக் 2’ பேச்சுவார்த்தையில் எத்தகைய விஷயங்கள் விவாதிக்கப்பட்டது என்பதை இரு தரப்பினரையும் வைத்து பேசி அறிந்துகொள்ளும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஏற்பாடு செய்யப்பட்டு வருவது ‘டிராக் 15’ பேச்சுவார்த்தையாகும்.
‘‘டிராக் 2 பேச்சுவார்த்தை என்பது பல தரப்பட்ட நாடுகளுடன், பல்வேறு தலைப்புகளில் பல விஷயங்கள் குறித்து பேசப்பட்டது. இது வழக்கமான நடைமுறை தான் என்று’’ அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.