
வாஷிங்டன்:
உலகத்துக்கு ஆபத்தை தரக்கூடிய நாடு பாகிஸ்தான் என்று அமெரிக்காவின் முன்னாள் சிஐஏ தலைவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிகார மையங்களில் ஒன்றாக சிஐஏ என்ற அமைப்பும் இடம்பெற்றுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் இந்த அமைப்பின் தலைவராக கெவின் ஹல்பர்ட் என்பவர் பணியாற்றினார். இவர் சமீபத்தில் நுண்ணறிவுப் பிரிவினருக்கான இணையதளம் ஒன்றில் பாகிஸ்தான் குறித்து எழுதியிருந்தார். அதில் பாகிஸ்தானின் மக்கள் தொகை 182 மில்லியனாக உள்ளது. இது ஆப்கானிஸ்தானை விட 5 மடங்கு அதிகமாகும். ( ஆப்கானிஸ்தானில் 33 மில்லியன் மக்கள் தொகை உள்ளது)
பாகிஸ்தானில் பொருளாதார வளர்ச்சி பாதிப்பு, தீவிரவாத செயல்பாடுகள், அணு ஆயுதங்கள் குவிப்பு போன்றவை மிகவும் கவலை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel