மத்திய அரசால் ரூ. 5 லட்சம் கோடி எதிர்பார்க்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஏலம் வெறும் 65 ஆயிரம் கோடியில் ஏமாற்றமாய் முடிந்ததற்கு யார் காரணம் என்ற விவாதங்கள் சமூக வலைதளங்கள் பரபரப்பாக நடந்து வருகிறது.
அரசால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிட்டதட்ட 4 லட்சம் கோடி விலை மதிப்புள்ள 700 Mhz மற்றும் 900 Mhz அலைக்கற்றைகளை யாரும் ஏலம் எடுக்க முன்வராததே ஏலம் ஏமாற்றத்தில் முடிய காரணம் ஆகும். இது மொத்த அலைக்கற்றைகளின் விகிதத்தில் 60% ஆகும்.
ரூ.63,325 கோடிக்கான ஏலம் 26 ஆவது சுற்றில் உறுதி செய்யப்பட்டது. வியாழன்று ஒவ்வொரு சுற்றுக்களும் 45 நிமிடங்களின் முடிவடைந்தது, ஆனால் முந்தைய காலங்களில் 60 நிமிடங்கள் நடப்பது வழக்கமாகும். பெரும்பாலானவர்கள் 2100Mhz (3ஜி/4ஜி), 2500Mhz (4ஜி) மற்றும் 800Mhz (2ஜி/4ஜி) ஆகியவற்றில்தான் அதிகம் ஆர்வம் காட்டினார்கள்.
கடந்த 2014-ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 2,90,000 கோடியாக இருந்த தகவல் தொடர்பு துறையின் கடன் மோடி பதவியேற்று ஓராண்டில் அதாவது 2015 டிசம்பரில் 3,80,000 கோடியாக உயர்ந்திருக்கிறது.
எனவே ஸ்பெக்ட்ரம் ஏலம் ஏமாற்றமாய் முடிந்ததற்கு மன்மோகன் சிங்கையோ முந்தைய காங்கிரஸ் அரசையோ குறை கூறாதீர்கள். அவர்கள் ஆட்சிகாலத்தில் இதைவிட அதிக தொகைக்கே ஏலங்கள் நடைபெற்றிருக்கிறது என்று நடுநிலையாளர்களும் சமூக வலைதளவாசிகளும் பாஜக தலைவர்களுக்கு அறிவுரை கூறி வருகிறார்கள்.