சென்னை: போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதத்தை முறையாக செலுத்தாவிடில் வாரண்ட் பிறப்பிக்கப்படும் என பெருநகர மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போக்குவரத்து விதிமீறலுக்குஅபராதம் வசூலிக்கும் வகையில், கால்சென்டர் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. வாகன விதிமீறல் தொடர்பான அபராத தொகை கட்டுவதற்காக சென்னையில் 10 இடங்களில் இதற்காக போக்குவரத்து காவல் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. வேப்பேரியில் அமைக்கப்பட்டுள்ள முகாமை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாது,
சென்னையில் அபராதம் செலுத்த வேண்டிய வாகன ஓட்டிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக சென்னையில் ஒரு நாளைக்கு 10,000 அபராத ரசீதுகள் வழங்கப்படுவதாகவும், விதிமீறலில் ஈடுபட்டவர்கள், வாகன ஓட்டிகள் முறையாக அபராதம் செலுத்த வேண்டும் என கூறியவர், அபராதம் செலுத்த வேண்டிய வாகன ஓட்டிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இது தொடர்பாக, விதிமீறல் வாகன ஓட்டிகளுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அபராத ரசீது செல்கிறது. அதில் உள்ள லிங்கில் சென்று செலுத்துவதில் சிக்கல் ஏற்படுவதாக புகார் வருகிறது. 5 அபராத ரசீதுகளுக்கு நிலுவையில் இருப்பவர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி உடனே செலுத்த வலியுறுத்தி வருகிறோம். இதனால், அபராத ரசீது களை செலுத்தி சிறப்பு கால் செண்டர் கொண்டு வரப்படும். தொடர்ந்து செலுத்தவில்லை என்றால் நீதிமன்ற வாரண்ட் மூலம் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்.
10 இடங்களில் இந்த சிறப்பு கால் செண்டர்கள் 15 நாட்களுக்கு செயல்படும். மாம்பலம், அடையாறு, மவுன்ட், வேப்பேரி, மெரினா, ஆயிரம் விளக்கு, ஆதம்பாக்கம், யானை கவுனி, வண்ணாரப்பேட்டை, செம்பியம் உட்பட 10 இடங்களில் சிறப்பு கால்செண்டர் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு தெரிவித்தார்.