கள்ளக்குறிச்சி:
கலவரம் நடக்கும்போது பொருட்களை திருடிச்சென்றவர்களே பொருட்களை திருப்பித்தாருங்கள்… இல்லாவிட்டால் போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என கள்ளக்குறிச்சியில் தண்டோரா போடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்மம் மரணம் விவகாரம் தொடர்பான கலவரத்தின் போது பள்ளிகளுக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், ஏசி நாற்காலி கணினி உள்ளிட்ட எதையும் விட்டு வைக்காமல் போட்டி போட்டுக் கொண்டு தங்களுக்கு கிடைத்ததை எல்லாம் சுருட்டிக்கொண்டு இரு சக்கர வாகனங்களில் தப்பி சென்றனர்.
இந்நிலையில், ’’கலவரம் நடக்கும்போது பொருட்களை திருடிச்சென்றவர்களே பொருட்களை திருப்பித்தாருங்கள்… இல்லாவிட்டால் போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என கள்ளக்குறிச்சியில் தண்டோரா போடப்பட்டுள்ளது.